மாநில சுயாட்சி விவகாரம்: தமிழக அரசிடம் இருந்து ஸ்டாலின் டியூஷன் ஃபீஸ் வாங்க வேண்டும்- கனிமொழி
மாநில சுயாட்சி விவகாரம் தொடர்பாக தமிழக அரசிடம் இருந்து ஸ்டாலின் டியூஷன் ஃபீஸ் வாங்க வேண்டும் என்று கனிமொழி பேசினார்.
ஈரோடு: மாநில சுயாட்சியை காக்க கருணாநிதியை போல் முதன்முதலாக குரல் எழுப்பி வரும் ஸ்டாலினுக்கு தமிழக அரசு டியூஷன் ஃபீஸ் கொடுக்க வேண்டும் என்று கனிமொழி பேசினார்.
மாநில சுயாட்சி, சமூக நீதி, மதநல்லிணக்கம் ஆகியவற்றை வலியுறுத்தி ஈரோடு மண்டல தி.மு.க. மாநாடு நேற்று தொடங்கியது. இதற்காக பெருந்துறை அண்ணா நகரில் 100 ஏக்கர் பரப்பளவில் தந்தை பெரியார் பெயரில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டை திருச்சி சிவா எம்.பி. திறந்துவைத்தார். இந்நிலையில் இன்று இரண்டாவது நாளாக மண்டல மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் திமுக கண்டன தீர்மானத்தை ஸ்டாலின் வாசித்தார். அதில் காவிரி மேற்பார்வை குழுவை அமைக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு திமுக கண்டனம் தெரிவித்தது.

எதிர்க்க வேண்டும்
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை பொருட்படுத்தவில்லை மத்திய அரசு. காவிரி மேற்பார்வைக் குழு பல் இல்லாதது- உயிரற்றது. காவிரி மேற்பார்வைக் குழுவை மத்திய அரசு அமைத்தால் தமிழக அரசு எதிர்க்க வேண்டும்.

உரிமைகளுக்கான குரல்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் கடும் போராட்டத்தை நடத்துவோம். மேலாண்மை வாரியத்துக்கு பதில் எந்த அமைப்பையும் ஏற்க முடியாது என்றார் ஸ்டாலின். இதைத் தொடர்ந்து மாநிலங்களவை எம்பி கனிமொழி பேசினார். அப்போது அவர் கூறுகையில், கருணாநிதியை போல் மாநில உரிமைகளுக்காக குரல் கொடுத்து வருபவர் ஸ்டாலின்.

கடிதம் எழுதினார்
மாநிலங்களுக்கான நிதியை குறைக்க மத்திய அரசு முயற்சித்தபோது கருணாநிதி போல் இந்தியாவில் முதல் ஆளாக குரல் கொடுத்தவர் ஸ்டாலின். இதுதொடர்பாக அனைத்து தென்னிந்திய முதல்வர்களுக்கும் கடிதம் எழுதினார்.

டியூஷன் ஃபீஸ்
இதைத் தொடர்ந்தே தமிழக அரசும் விழித்துக் கொண்டு நிதி குறைப்பு விவகாரத்தை எதிர்க்க ஆரம்பித்தது. எனவே மாநில சுயாட்சி விவகாரத்தில் தமிழக அரசிடம் இருந்து ஸ்டாலின் டியூஷன் ஃபீஸ் வாங்க வேண்டும் என்று கனிமொழி பேசினார்.
-
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ்












Click it and Unblock the Notifications