கோவிலின் அருகில் தவறு செய்த ஜோடி… தட்டிக்கேட்ட அதிகாரிக்கு அடிஉதை
ஈரோடு: பூங்காவில் இளஞ்ஜோடியின் சில்மிஷத்தை கண்டித்த அரசு ஊழியருக்கு அடி உதை கொடுத்த நான்கு வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஈரோடு நகரில் மையப்பகுதியில் உள்ள வ.உ.சி பூங்காவில் எப்போதுமே மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.
இதனால், பொதுமக்களின் வசதிக்காக பூங்காவின் முக்கியமான பகுதிகளில் "கேமரா" ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ளது.
கண்காணிப்பாளர்கள்:
இதேபோல், அங்குள்ள நடவடிக்கையை கண்காணிக்க, கண்காணிப்பாளர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளார்.
இளஞ்சோடியின் "கில்மா":
இப்பூங்காவில் உள்ள, ஆஞ்சநேயர் கோவில் அருகே நேற்று மாலை ஒரு இளஞ்ஜோடி சில்மிஷத்தில் ஈடுபட்டனர். ஆஞ்சநேயர் கோவிலில் இருந்த கேமரா மூலம் இளஞ்ஜோடியின் சில்மிஷத்தை கோவில் கணக்கர் ஜெயந்த் கவனித்தார்.
பெண்ணை தாக்கிய வாலிபர்கள்:
அத்தோடு அந்த ஜோடியுடன் வேறு சில வாலிபர்கள் தகராறில் ஈடுபட்டு, அப்பெண்ணை தாக்கினர். இதனை பார்த்து கணக்கர் ஜெயந்த் அங்கு சென்று அந்த பெண்ணை தாக்கிய இளைஞர்களை கண்டித்தார்.
அடிவாங்கிய அரசு ஊழியர்:
அந்த ஜோடியுடன் பாதுகாப்புக்கு வந்த நான்கு வாலிபர்கள் ஜெயந்தை தாக்கி, கோவிலில் உள்ள அறநிலைய துறை அலுவலக கண்ணாடி ஜன்னலை உடைத்தனர்.
நழுவிய இளம் ஜோடி:
அந்நேரம் அந்த இளம்ஜோடி தப்பி சென்றனர்.அதற்குள் கோவிலுக்கு வந்த பக்தர்கள் இதுபற்றி, வீரப்பன்சத்திரம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
எ ஸ்.ஐ சரவணன் தலைமையிலான போலீஸார் வந்து நான்கு வாலிபர்களையும் பிடித்து விசாரித்தனர்.
தாக்குதல் நடத்தியவர்கள்:
போலீசாரின் விசாரணையில் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் ஈரோடு ஆண்டவர் வீதியை சேர்ந்த ஜானகி ராமன், குமலன்குட்டை மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த தினேஷ்குமார், முனிசிபல் காலனியை சேர்ந்த அஷ்வந்த், கோவை சரவணம்பட்டியை சேர்ந்த பாலசந்திரன் என்பது தெரியவந்தது.
கைது செய்த போலீசார்:
காயம் அடைந்த ஜெயந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வீரப்பன்சத்திரம் போலீஸார் அந்த நான்கு வாலிபர்களையும் கைது செய்து அழைத்து சென்றனர். தப்பி ஓடிய ஜோடியினரை பற்றிய விசாரணை நடத்திவருகிறார்கள்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications