வைகோவிடம் எடப்பாடி பழனிச்சாமி கவனமாக இருக்க வேண்டும்.. ஈவிகேஎஸ் அட்வைஸ்
திமுக சார்பில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கலந்துகொண்டார்.
சென்னை: ரகசிய வாக்கெடுப்புக்கு எதிராக பேசும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவிடம், முதல்வர் எடப்பாடி பழனிசாமி கவனமாக இருக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது திமுகவினர் தாக்கப்பட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் சட்டை கிழிக்கப்பட்டது. எம்.எல்.ஏக்களும் குண்டுகட்டாக வெளியேற்றப்பட்டனர்.

இதனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். சென்னையில் திமுக சார்பில் நடைபெற்ற உண்ணாவிரதத்தில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், ஜெயலலிதா மரணம் குறித்து நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். அவரை கொன்றதாக கூறப்படும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்.
சட்டப்பேரவையில் நடந்த விவகாரம் தொடர்பாக தமிழக பொறுப்பு ஆளுநர் சரியான நடவடிக்கை எடுக்கு வேண்டுமென்றால், சட்டப்பேரவையை கலைத்துவிட்டு, தேர்தலை நடத்த வேண்டும். அது ஒன்று தான் தீர்வாக இருக்கும். ரகசிய வாக்கெடுப்புக்கு எதிராக பேசும் வைகோவிடம், முதல்வர் எடப்பாடி பழனிசாமி கவனமாக இருக்க வேண்டும்'' என்றார்.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications