"110" அறிக்கை போல் இருக்கக் கூடாது சிவாஜி கணேசன் மணிமண்டபம் அறிவிப்பு... ஈவிகேஎஸ்.இளங்கோவன்
சென்னை : நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு 110 அறிக்கை போன்று இருந்துவிடக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது...

நடிப்பில் இமயம் போல் உயர்ந்து 300 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, குறிப்பாக இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களின் வேடங்களை ஏற்று உணர்ச்சிப்பூர்வமாக நடித்து, மக்களிடையே தேசபக்தியை வளர்த்து நடிகர் திலகம் என மக்களால் போற்றப்பட்ட சிவாஜி கணேசன் அவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் மணிமண்டபம் கட்டப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருக்கிறார்.
தென்னிந்திய நடிகர் சங்கம் மணிமண்டபம் கட்டுவதற்காக தமிழக அரசால் 2002 இல் 65 சென்ட் நிலம் வழங்கப்பட்டு, இதுவரை அப்பணி நிறைவேறாதது அனைவரையும் வருத்தத்தில் ஆழ்த்தி வந்தது. தற்போது அரசே கட்டும் என்று அறிவித்திருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக வரவேற்கிறேன்.
ஆனால், சட்டமன்றத்தில் விதி 110-ன்கீழ் வாசிக்கிற அறிவிப்புகளைப் போல இந்த அறிவிப்பும் செயலுக்கு வரலாமல் இருக்காது என நம்புகிறேன்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை பல ஆண்டுகளாக நடத்திய சிவாஜி சமூகநல பேரவைத் தலைவர் சந்திரசேகர் அவர்களை பாராட்ட கடமைப்பட்டிருக்கிறேன்'
இவ்வாறு தனது அறிக்கையில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications