சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு ஒரு இடம்கூட கிடைக்காது... இளங்கோவன் ஆரூடம்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு ஒரு இடம்கூட கிடைக்காது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நேற்று பிரசாரம் செய்த பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா, காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணியை கடுமையாக விமர்சனம் செய்தார். அதிமுகவையும் கடுமையாக விமர்சனம் செய்தார்.

இது குறித்து சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழக சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது. தமிழகத்தில் மோடி அலை ஒன்றும் வீசவில்லை.
இலவசங்களை நம்பி தமிழக மக்கள் இல்லை. காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் கருணாநிதியின் பிரசாரம் தமிழக தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் மோடி தமிழகம் வருவது எந்தஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
இவ்வாறு ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறினார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications