காங். கூட்டணியில் தேமுதிக இணைய வேண்டும்: இளங்கோவன் அழைப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: காங்கிரஸ் கூட்டணியில் தேமுதிகவும் இணைய வேண்டும் என்று தமிழக காங். கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம்நபி ஆசாத் சென்னையில் இன்று கருணாநிதியை சந்தித்து பேசினார். இதன் பின்னர் திமுக- காங்கிரஸ் கூட்டணி அதிகாரப்பூர்வமாக உதயமானது.

இந்த சந்திப்புக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியதாவது:
சட்டசபை தேர்தலில் மதச்சார்பற்ற கட்சிகள் ஒருங்கிணைய வேண்டும். காங்கிரஸ் இடம்பெறும் கூட்டணியில் தேமுதிகவும் இணைய வேண்டும் என்று அக்கட்சித் தலைவர் விஜயகாந்துக்கு அழைப்பு விடுப்போம்.
இவ்வாறு இளங்கோவன் கூறினார்.












Click it and Unblock the Notifications