திமுக- காங். தொகுதிப் பங்கீட்டு சிக்கலுக்கு தீர்வு வருமா? ராகுலுடன் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆலோசனை
சென்னை: திமுகவுடனான தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில் காங். துணைத் தலைவர் ராகுல் காந்தியை தமிழக காங். தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ், 2011-ல் போட்டியிட்ட 63 தொகுதிகளை கேட்கிறது. ஆனால் திமுகவோ, தமாகா உள்ளிட்ட கட்சிகளும் வரக் கூடும் என்பதால் அத்தனை தொகுதிகளைத் தர முடியாது என்பதில் உறுதியாக இருக்கிறது.

காங்கிரஸ், வாசனின் தமாகாவுக்கு தலா 25 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யலாம் என்பதும் திமுகவின் எண்ணம். ஆனால் இதை காங்கிரஸ் உடனடியாக ஏற்காததால் திமுகவுடனான தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் ஏற்பட்டது. அத்துடன் வாசன் உள்ள கூட்டணியில் இருக்க வேண்டாம் என ராகுல் முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் டெல்லியில் ராகுல் காந்தியை ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். இச்சந்திப்பின் போது குலாம்நபி ஆசாத், முகுல் வாஸ்னிக் ஆகியோரும் உடனிருந்தனர்.
ஜி.கே.வாசனின் தமாகா இடம்பெற்றிருந்தாலும் அக்கட்சியை விட கூடுதலாக சில தொகுதிகளை பெற்று திமுக அணியிலேயே நீடிக்கலாம் என்பது தமிழக காங்கிரஸ் தலைவர்களின் விருப்பம். இன்றைய ஆலோசனையின் முடிவில் இந்த விருப்பம் நிறைவேறுமா? திமுகவுடனான தொகுதிப் பங்கீட்டின் அடுத்த நகர்வு இருக்குமா? என்பது தெரியவரும்.
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications