இ.கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுடன் தமிழக காங். தலைவர் இளங்கோவன் சந்திப்பு!
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவை தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று சந்தித்துப் பேசினார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராகப் பொறுப்பேற்ற இளங்கோவன் கடந்த 9-ந் தேதி திமுக தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
இதுகுறித்து கருத்துத் தெரிவித்த இளங்கோவன், திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர் என்ற முறையில் கருணாநிதியைச் சந்தித்து வாழ்த்து பெற்றேன்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அனுமதி தந்தால் அவரையும் சந்திப்பேன். விரைவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என். சங்கரய்யா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு ஆகியோரையும் சந்தித்து வாழ்த்துப் பெறுவேன் எனத் தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து சென்னை தியாகராயர் நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு அலுவலகத்துக்கு இளங்கோவன் நேற்று சென்று மூத்த தலைவர் சங்கரய்யாவை சந்தித்துப் பேசினார்.

பின்னர் இன்று பகல் 12 மணிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் மூத்த தலைவர் நல்லகண்ணுவை சந்தித்து வாழ்த்து பெற்றார். மரியாதை நிமித்தமாக நல்லகண்ணுவை சந்தித்தாக இளங்கோவன் தெரிவித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications