மண்டையை பிளந்த வெயில்.. ஒரே நிமிடத்தில் 'ஓஞ்சு' போன ஈவிகேஎஸ்.. காங்கிரஸார் டென்ஷன்!
வேலூர்: ஆம்பூரில் பிரச்சாரத்திற்கு வந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெயிலைத் தாங்க முடியாமல் ஒரேயொரு நிமிடம் மட்டும் பேசியது காங்கிரஸ் கட்சியினரை அதிருப்தி அடைய வைத்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் விஜய் இளஞ்செழியனுக்காக பிரச்சாரம் செய்ய முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று காலை ஆம்பூருக்கு வந்தார். ஆம்பூர் பைபாஸ் சாலையில் போடப்பட்டிருந்த திறந்தவெளி மேடையில் காலை 10.10 மணிக்கு ஏறிய வேலூர் முன்னாள் எம்.எல்.ஏ. சி. ஞானசேகரன் 15 நிமிடங்கள் பேசினார்.
அப்போது வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதை உணர்ந்த இளங்கோவன் ஞானசேகரனை அடுத்து மேடை ஏறினார். வெயிலை தாங்க முடியாது என்று நினைத்த அவர் மேடையில் பேசுகையில், அனைவருக்கும் வணக்கம். நான் பேச நினைத்தவற்றை ஞானசேகரனே பேசிவிட்டார். அதனால் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் இளஞ்செழியனுக்கு வாக்களித்து அவரை வெற்றி பெறச் செய்யுங்கள் என்று கூறி பேச்சை முடித்துக் கொண்டார்.
திமுக, அதிமுகவை தாக்கி இளங்கோவன் பேசுவார் என்று நினைத்து அங்கு கூடியிருந்த காங்கிரஸார் மற்றும் பொதுமக்கள் அவர் வெறும் ஒரேயொரு நிமிடம் மட்டும் பேசியதால் அதிருப்தி அடைந்தனர்.
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகா புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் டிகே சிவக்குமார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications