பதவிக்காக மத்திய, மாநில அரசுகளுக்கு சாதகமாக செயல்படுகிறார் ரோசய்யா... ஈ.வி.கே.எஸ். புகார்...
சென்னை : மத்திய, மாநில அரசுகளுக்கு சாதகமாக தமிழக ஆளுநர் ரோசய்யா செயல்படுவதாக தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் குற்றம்சாட்டியுள்ளார்.
மத்திய, மாநில அரசுகளுக்கு சாதகமாக நடந்து கொள்வதால் ஆளுநர் ரோசையா பதவியில் தொடர்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது..

தமிழகத்தில் அதிமுக அரசு மீது எழுந்துள்ள பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து ஆளுநர் கே.ரோசய்யாவை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தோம். ஆனாலும், ஆளுநரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. மத்தியில் பாஜக அரசு பதவியேற்ற பிறகு பல மாநில ஆளுநர்கள் அதிரடியாக மாற்றப்பட்டனர்.
ஆனால், ரோசய்யா மட்டும் மாற்றப்படவில்லை. மத்திய, மாநில அரசுகளுக்கு சாதகமாக நடந்து கொள்வதால் அவர் பதவியில் தொடர்கிறார். அதிமுக அரசு மீது அளித்த புகார் மனு குறித்து என்ன செய்வது என்பதை விரைவில் அறிவிப்போம்.
தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசு மீது வரிசையாக ஊழல் புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. தமிழ்நாடு மின் வாரியத்தில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்திருப்பதாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது குறித்து திமுக தலைவர் கருணாநிதி வெளிப்படையாக குற்றம்சாட்டியுள்ளார். ஆனாலும், இது குறித்து முதல்வர் ஜெயலலிதா உள்பட யாரும் விளக்கம் அளிக்கவில்லை.
பிரதமர் நரேந்திர மோடி போல மவுனமாக இருப்பதே சிறந்தது என ஜெயலலிதாவும் முடிவெடுத்துவிட்டாரா? என்பது தெரியவில்லை. இது குறித்து முதல்வர் ஜெயலலிதா விளக்கம் அளிக்க வேண்டும். இல்லையெனில் மத்தியப் பிரதேசத்தில் நடந்த வியாபம் ஊழல் போல இதுவும் விஸ்வரூபம் எடுக்கும்.
பாஜக தலைவர் அமீத்ஷாவை அழைத்து காமராஜர் பிறந்த நாளை கொண்டாட சிலர் ஏற்பாடு செய்து வருகின்றனர். காமராஜர் பெயரை உச்சரிக்கக் கூட பாஜகவினருக்கு தகுதி இல்லை. என்னதான் முயற்சித்தாலும் தமிழகத்தில் பாஜக வளராது.
திமுகவுடன் கூட்டணி என நான் கூறவில்லை. கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் மேலிடம் முடிவெடுக்கும். வரும் 23-ம் தேதி காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி திருச்சி வருகிறார். காமராஜர் பிறந்த நாள் பொதுக் கூட்டத்தில் பங்கேற்கும் அவர், 16 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடுகிறார்.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. அவர் உடல் நலம் பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்'' என்று இளங்கோவன் கூறியுள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications