சினிமாவில் கோரஸ் பாடுவது போல... இளங்கோவன் கிண்டல்

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஏதோ சினிமாவில் கோரஸ் பாடுவது போல அமைச்சர்கள் மொத்தமாக பதவியேற்றுக் கொண்டு அந்த பதவியேற்பு விழாவையே கேலிக்கூத்தாக்கியுள்ளனர் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.

ஈரோடு வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு உச்சநிதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும்.

EVKS Elangovan slams TN govt

தமிழக முதல் அமைச்சராக ஜெயலலிதா பதவியேற்றுக்கொண்டபோது, அரசியல் சட்டத்திற்கு புறம்பான பல்வேறு சம்பவங்கள் அறங்கேறியது. பதவியேற்பு நிகழ்ச்சியின்போது தேசிய கீதம் இரண்டு நிமிடம் மட்டுமே ஒலிக்கப்பட்டது தேசிய கீதத்தை அவமானப்படுத்தும் செயல்.

அமைச்சர் பதவியேற்பின்போது எல்லோரும் தனித்தனியே பதவிப்பிரமாணம் எடுப்பதுதான் முறையாகும். இதுதான் இதுவரை நடைபெற்றுக்கொண்டு வருகிறது.

அதைவிட்டுவிட்டு வரிசையாக நின்றுகொண்டு சினிமாவில் கோரஸ் பாடுவதைப்போல பதவியேற்பு நிகழ்ச்சியில் பதவிப்பிரமாணம் செய்து கொள்வது என்பது அந்த நிகழ்ச்சிக்கே உரிய முக்கியத்துவத்தை குறைப்பது என்பதுமட்டுமல்ல. பதவியேற்பு நிகழ்ச்சியை ஒரு கேலிப்பொருளாக ஆக்கியிருக்கிறார்கள் என்றார். இளங்கோவன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+