குஷ்பு இருப்பதால்தான் தமிழக காங்கிரஸை மக்கள் திரும்பிப் பார்க்கிறார்கள்... இளங்கோவன் அதிரடி!
சென்னை: குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இருப்பதால்தான், அவரை வைத்துத்தான் மக்கள் காங்கிரஸை திரும்பிப் பார்க்க ஆரம்பித்துள்ளனர். எனவே அவரை தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிப்பதில் எந்தத் தவறும் இல்லை என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார் என்பது பெரும் போட்டியாக மாறியுள்ளது. பல சீனியர் தலைவர்கள் முட்டி மோதி வருகின்றனர். ஆனால் நடிகை குஷ்பு மறுபக்கம் சத்தம் போடாமல் டெல்லியில் காய் நகர்த்தி வருகிறார். அவருக்கு பகிரங்கமாக ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

ப.சிதம்பரம், திருநாவுக்கரசர், சுதர்சன நாச்சியப்பன், பீட்டர் அல்போன்ஸ், செல்லக்குமார், வசந்தகுமார் என பலர் போட்டியில் இருந்தாலும் கூட, குஷ்பு குறித்து பகிரங்கமாக இளங்கோவன் ஆதரவைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், குஷ்பு நட்சத்திர அந்தஸ்து கொண்டவர். அவரை தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்கலாம்.
தமாகா பிரிந்து சென்றபோது குஷ்புவை காங்கிரஸுக்கு வந்தார். அவரை வைத்து பல பொதுக்கூட்டங்கள், தேர்தல் பிரசாரங்கள் நடந்துள்ளன. மக்கள் பெருமளவில் கூடினர். குஷ்பு வந்ததால்தான் தமிழக காங்கிரஸை மக்கள் திரும்பிப் பார்க்க ஆரம்பித்தனர். எனவே அவரை தலைவராக்குவதில் தவறில்லை என்று கூறியுள்ளார் இளங்கோவன்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications