பதவியற்றார்.... இன்று முதல் தமிழக காங்கிரஸ் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வசம்!
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவராக இன்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பதவியேற்றுள்ளார். கட்சித் தலைமையின் எதிர்பார்ப்புகளுக்கேற்ப தான் செயல்படப் போவதாக இளங்கோவன் கூறியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சியில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட கட்சி உடைய ஆரம்பித்து விட்டது. தலைவராக இருந்து வந்த ஜி.கே.வாசன் ஆதரவாளரான ஞானதேசிகன் பதவி விலகி விட்டார். அவரைத் தொடர்ந்து இன்னொரு ஆதரவாளரான கோவை தங்கமும் விலகி விட்டார். மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸை வாசன் தொடங்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அவரும் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். நாளை தனது முடிவை அறிவிக்கப் போவதாகவும் கூறியுள்ளார்.

இந்த நிலையில் யாரும் எதிர்பாராதவிதமாக ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை காங்கிரஸ் தலைவராக கட்சி மேலிடம் அறிவித்துள்ளது. இதையடுத்து இன்று காலை சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தார் இளங்கோவன். அவருடன் அவரது ஆதரவாளர்களும் திரண்டு வந்திருந்தனர்.
பின்னர் முறைப்படி புதிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார் இளங்கோவன்.
முன்னதாக நேற்று செய்தியாளர்களிடம் இளங்கோவன் பேசுகையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக என்னை அறிவித்திருக்கிறார்கள். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும், துணைத் தலைவர் ராகுல் காந்திக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். கண்டிப்பாக அவர்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப என்னுடைய பணிகள் இருக்கும். பதவியேற்ற பின்னர் ஞானதேசிகனை நான் சந்தித்துப் பேசுவேன் என்று அவர் கூறியிருந்தார்.
-
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல..பெட்டியை கட்டும் செல்வப் பெருந்தகை! பதவிக்கு போட்டி போடும் பெரும் தலைகள் -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
ராகுல், விஜய்க்கு நெருக்கம்.. ராஜ்யசபா எம்பியாகும் பிரவீன் சக்கரவர்த்தி.. யார் இவர்? -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்!












Click it and Unblock the Notifications