எதிர்ப்பார்ப்புகளுக்கேற்ப பணியாற்றுவேன்...! - ஈவிகேஎஸ் இளங்கோவன்
Subscribe to Oneindia Tamil
சென்னை: காங்கிரஸ் மேலிடத்தின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு செயல்படுவேன் என்று தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார்.
தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த ஞானதேசிகன் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அவரது ராஜினாமாவை உடனடியாக ஏற்றுக் கொண்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, புதிய தலைவராக ஈவிகேஎஸ் இளங்கோவனை இன்று நியமித்தார்.
இதைத் தொடர்ந்து சென்னை சத்தியமூர்த்தி பவனில் நிருபர்களிடம் பேசிய இளங்கோவன், "தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக என்னை நியமித்த காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத்தலைவர் ராகுல் ஆகியோருக்கு நன்றி.
அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு பணியாற்றுவேன்.
மூத்த காங்கிரஸ் தலைவர்களான ஞானதேசிகன், தங்கபாலு, பிரபு, எஸ்.ஆர். பாலசுப்ரமணியன், குமரி அனந்தன் உள்ளிட்டவர்களைச் சந்திப்பேன்," என்றார்.












Click it and Unblock the Notifications