முதல்வர் விரைவில் குணமடைந்து பணிக்குத் திரும்புவார்- ஈவிகேஎஸ் இளங்கோவன்
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா, விரைவில் பூரண குணம் அடைந்து தனது வழக்கமான பணிகளுக்குத் திரும்புவார் என்ற நம்பிக்கை இருப்பதாக ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா கடந்த 22ம் தேதி முதல் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு பல்வேறு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. லண்டன் டாக்டர் ரிச்சர்ட், எய்ம்ஸ் மருத்துவமனை சிறப்பு நிபுணர்கள் சென்னை வந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மத்திய அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்து முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரித்து செல்கின்றனர்.
இன்று காலையில் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரிக்க சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் வருகை தந்தார்.
அப்பல்லோ மருத்துவமனையில் ஓ. பன்னீர்செல்வம், தம்பிதுரையிடம் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.
மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த ஈவிகேஎஸ் இளங்கோவன், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், தமிழக முதல்வர் ஜெயலலிதா, விரைவில் பூரண குணம் அடைந்து தனது வழக்கமான பணிகளுக்குத் திரும்புவார் என்று கூறினார்.
லண்டனில் இருந்து டெல்லியில் இருந்தும் மருத்துவர்கள் வந்து முதல்வருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இதன் மூலம் அவர் விரைவில் குணமடைவார் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்தார். முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்தனை செய்வதாகவும் அவர் கூறினார்.
கடந்த காலங்களில் ஜெயலலிதா பற்றி சர்ச்சையாக பேசி அதிமுக தொண்டர்களின் கோபத்திற்கு ஆளானார் ஈவிகேஎஸ் இளங்கோவன். இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள போது அவருக்கு ஆதரவாக பேசி அதிமுக தொண்டர்களின் நன் மதிப்பை சம்பாதித்து வருகிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications