இந்தியைத் திணித்தால் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்படும்... ஈவிகேஎஸ்.இளங்கோவன் எச்சரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை : மத்திய பாஜக அரசு ஹிந்தியைத் தொடர்ந்து திணித்தால், அம்மொழியைப் பேசாத மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எச்சரித்துள்ளார்.
சென்னையில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசியதாவது...

டெல்லியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மத்திய அரசு ஊழியர்கள் ஹிந்தியில் கையெழுத்திட வேண்டும் என்று பேசியுள்ளார். இது ஹிந்தி பேசாத மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹிந்தியை நேரடியாகவும் மறைமுகமாகவும் திணிப்பதற்கு மத்திய பாஜக அரசு முயற்சித்து வருகிறது. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால், ஹிந்தி பேசாத மக்களிடையே பெரும் கொந்தளிப்பு உருவாகும். இவ்வாறு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications