தமிழகத்தின் தவிர்க்க இயலாத சக்தி ஜெயலலிதா - ஈவிகேஎஸ் இளங்கோவன்
சென்னை : தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் சாதித்த பெண்மணி, தமிழகத்தின் தவிர்க்க முடியாது சக்தியாக திகழ்பவர். அவர் பூரண குணமடைய வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கட்சி பேதம் பார்க்காமல் அனைவரும் முதல்வர் ஜெயலலிதா குணமடைய வாழ்த்து கூறி வருகின்றனர்.

சென்னை எழும்பூரில் நடிகர் சிவாஜி பேரவையின் சார்பில் நடந்த விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு பேசிய இளங்கோவன், தலைவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போவது இயற்கையானது. ஆனால், மருத்துவமனையை முற்றுகையிடுவதும், பூசணிக்காய் உடைப்பதும் எந்தவகையில் நியாயம்? இது பொது மக்களுக்கும், நோயாளிகளுக்கும் இடைஞ்சலாக இருக்காதா? என்று கேட்டார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் சாதித்த பெண்மணி, தமிழகத்தின் தவிர்க்க முடியாது சக்தியாக திகழ்பவர். அவர் பூரண குணமடைய வேண்டும் என வாழ்த்தினார் ஈவிகேஎஸ் இளங்கோவன். நோயாளிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடைஞ்சல் இல்லாத வகையில் அரசு இது போன்ற சம்பவங்களை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது திருவாரூரில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், தமிழக முதல்வர் தொடர்பாக தெரிவித்த கருத்துகள் கடுமையான சர்ச்சைகளை உருவாக்கிய நிலையில், அதிமுக தொண்டர்கள் அவருக்கு எதிராக தமிழகம் முழுக்க போராட்டங்களில் ஈடுபட்டனர். தேர்தல் முடிந்து அதிமுக மீண்டும் வென்று முதல்வர் ஜெயலலிதா பதவியேற்றுக் கொண்ட பின்னர் இப்போது உடல்நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவரை பாராட்டி பேசியுள்ளார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications