5 முறை மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் பழுதாகியதால் ஸ்தம்பித்த முத்தரசநல்லூர்
திருச்சி: ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில், 5 முறை வாக்குப் பதிவு எந்திரம் பழுதானதால் வாக்குப் பதிவு நிறுத்தப்பட்ட முத்தரச நல்லூரில் வாக்குப்பதிவு ஒருவழியாக நிறைவுற்றது.
ஏற்கனவே காலையில், ஓலையூர் மற்றும் அதவத்தூர் வாக்குச்சாவடிகளில் மின்னணு இயந்திரக் கோளாறால் வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, இயந்திரம் சரிசெய்யப்பட்ட பின்னர் 45 நிமிடங்கள் தாமதமாக துவங்கியது.
அதே போன்று முத்தரசநல்லூர் வாக்குச்சாவடியில் ஏற்கனவே இரண்டு முறை மின்னணு இயந்திரம் பழுதடைந்து வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு மீண்டும் நடைபெற்றது.

இந்நிலையில் 3 ஆவது முறையாக மதியம் 1.30 மணியளவில் வாக்குப் பதிவு இயந்திரத்தில் மீண்டும் கோளாறு ஏற்பட்டது. பலர் கடுப்பாகி வீடு திரும்பத் தொடங்கி விட்டனர். மீண்டும் இரண்டு முறை பழுதடைந்து 5ஆவது முறையாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டிருந்தது.
ஆத்திரமடைந்த வாக்காளர்கள் வாக்குச்சாவடி அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். மேலும், பழுதான வாக்குப் பதிவு இயந்திரத்திற்கு பதிலாக புதிய இயந்திரத்தினை மாற்ற வேண்டும். இல்லையெனில் அவ்வாக்குச்சாவடிக்கு மறுவாக்குப் பதிவினை அறிவிக்க வேண்டும் என்று தேர்தல் அதிகாரியின் வாகனத்தை முற்றுகையிட்டு வாக்காளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்பின்னர் வாக்கு பதிவு இயந்திரத்தின் கோளாறு சரி செய்யப்பட்டு வாக்குப்பதிவானது மீண்டும் துவங்கி மாலை ஆறு மணியுடன் முடிவடைந்தது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications