காவிரி டெல்டாவில் திமுகவை கட்டிக் காத்த கோ.சி.மணி !
ஊராட்சிமன்றத் தலைவர், சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர், சட்டமேலவை உறுப்பினர், அமைச்சர் என பல பொறுப்புகளை வகித்தவர் கோ.சி.மணி
தஞ்சை: உடல்நலக்குறைவு காரணமாக கும்பகோணம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தி.மு.க. முன்னாள் அமைச்சர் கோ.சி. மணி இன்று காலமானார்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த மேக்கிரி மங்கலத்தில் 1929 ஆம் ஆண்டு செப்டம்பர் 13 ஆம் தேதி பிறந்தார் கோ.சி. மணி. ஊராட்சிமன்ற தலைவராக பொது வாழ்க்கையை துவங்கிய கோ.சி.மணி. காவிரி டெல்டா பகுதிகளில் திமுக கட்சியை வளர்த்தவர்களில் ஒருவராக திகழ்ந்தவர்.

ஊராட்சிமன்றத் தலைவர், சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர், சட்டமேலவை உறுப்பினர், அமைச்சர் என பல பொறுப்புகளை வகித்த அவர், ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் திமுக செயலராக நீண்ட காலம் பதவி வகித்தவர்.
தி.மு.க. ஆட்சிக் காலத்தில் உள்ளாட்சி, விவசாயம் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர் கோ.சி. மணி. தி.மு.க.வின் உயர்மட்டக்குழு உறுப்பினரான கோ.சி. மணி 4 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், 1968 முதல் 1980 வரை 12 ஆண்டுகள் தமிழக சட்டமேலவை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.
87 வயதான கோ.சி.மணி கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்டிருந்தார். தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று இரவு 9.10 மணிக்கு அவர் உயிர் பிரிந்தது.
-
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்!












Click it and Unblock the Notifications