ஜெ. சிகிச்சை பெற்ற சிடி மட்டும் விசாரணை ஆணையத்தில் கொடுத்தா என்ன ஆகும் தெரியும்ல? இன்பத் தமிழன்
ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை பெற்ற சிடியை விசாரணை ஆணையத்தில் கொடுத்தால் சசிகலா குற்றமற்றவர் என நிரூபிக்கப்படுவார் என்று முன்னாள் அமைச்சர் இன்பத் தமிழன் தெரிவித்தார்.
Recommended Video

சென்னை: ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை பெற்ற சிடியை விசாரணை ஆணையத்தில் கொடுத்தால் அதில் சசிகலா நிரபராதி என்பது மக்களுக்கும், ஊடகங்களுக்கும் தெரியவரும் என்று டிடிவி தினகரன் ஆதரவாளர் இன்பத்தமிழன் தெரிவித்தார்.
சசிகலா குடும்பத்தினரை குறிவைத்து நடத்தப்படும் மெகா ரெய்டு குறித்து சன் நியூஸ் சேனலில் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் இன்பத் தமிழன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ரூ.900 கோடி பணமெல்லாம் தினகரன் தரப்பினரிடம் இல்லை. அது வேறு யாரிடம் உள்ளதோ எனக்கு தெரியாது.

யாரிடம் உள்ளது
ஜெயலலிதா சிகிச்சை பெறும் சிடியை வலைவீசி அதிகாரிகள் தேடி வருகின்றனர். அந்த சிடி எங்களிடம்தான் உள்ளது. ஆனால் யாரிடம் உள்ளது என்பதை சொல்ல மாட்டேன்.

குற்றமற்றவர்
அந்த சிடி மட்டும் விசாரணை ஆணையத்தில் ஒப்படைத்தால் ஜெயலலிதா மரணத்துக்கும் சசிகலாவுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதும் தெரிய வரும். அவர் குற்றமற்றவர் என்பது வெளியுலகத்துக்கு தெரியக் கூடாது என்பதற்காகவே சிடியை தேடுகின்றனர்.

உண்மை வெளிவரும்
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை, மருத்துவக் குறிப்புகள் அந்த சிடியில் உள்ளன. அந்த சிடி வெளியே வந்தால் ஜெயலலிதா மரணத்தில் சசிகலாவுக்கு எந்த தொடர்பும் இல்லை என்ற உண்மை மக்களுக்கும் ஊடகங்களுக்கும் தெரிந்துவிடும். அது நடக்கக் கூடாது என்பதற்காகத்தான் சிடியை தேடுகின்றனர்.

ரெய்டு நடக்குது
விசாரணை கமிஷனிடம் அந்த சிடியை ஒப்படைப்போம். ஆர்.கே.நகர் தேர்தலில் தினகரன் போட்டியிடுவதை தடுப்பதற்காகவும் இரட்டை இலை சின்னம் எங்கள் அணிக்கு கிடைக்கக் கூடாது என்பதற்காகவும் இந்த ரெய்டு நடக்கிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications