திமுக முதன்மை செயலாளராக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு நியமனம்.. அன்பழகன் அதிகாரப்பூவ அறிவிப்பு
சென்னை: திமுக முதன்மை செயலாளராக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு நியமித்து பொதுச்செயலாளர் க.அன்பழகன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளார்
திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன், வெளியிட்டுள்ள அறிவிப்பில்; திமுக முதன்மை செயலாளராகப் பொறுப்பு வகித்து வரும் டி.ஆர்.பாலு, திமுக நாடாளுமன்ற குழுத் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார் எனவே அவருக்கு பதிலாக திமுக முதன்மை செயலாளராக கே.என்.நேரு எம்.எல்.ஏ. நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார.

அண்மையில் நடந்து முடிந்த திருச்சி மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் மொத்தமுள்ள 14 ஒன்றியங்களையும் திமுக கைப்பற்றியது. இதன் காரணமாகவே கேஎஎன் நேருவுக்கு திமுகவின் முதன்மைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டதாக சொல்கிறார்கள்.
திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.என்.நேரு, 40 ஆண்டு கால அரசியல் அனுபவம் உள்ளபவர். 30 ஆண்டுகள் மாவட்டச் செயலாளராக இருந்துள்ளார். திருச்சியில் திமுகவின் முக்கியதலைவராக கே.என்.நேரு திகழ்கிறார்.












Click it and Unblock the Notifications