கரூர்: மாஜி மா.செ. செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களை கூண்டோடு கட்டம் கட்டிய ஜெ.!
சென்னை: கரூர் மாவட்ட அதிமுக பொருளாளர் பிகேஎஸ் முரளி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் 4 பேரை கட்சியை விட்டு அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அதிரடியாக நீக்கியுள்ளார். கட்சி நடவடிக்கைக்கு எதிராக செயல்பட்டதாக கூறி அவர்கள் நால்வரும் நீக்கப்பட்டுள்ளனர் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இவர்கள் அனைவரும் கரூர் மாவட்ட மாஜி மா.செவும், அமைச்சருமான செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அ.தி.மு.க.,வில் செல்வாக்குடன் வலம் வந்த, செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி மற்றும் மாவட்ட செயலர் பதவி, சில மாதங்களுக்கு முன் பறிக்கப்பட்டது.

இதனால், புதிய மாவட்ட செயலராக விஜயபாஸ்கர் என்பவர் நியமிக்கப்பட்டார். செந்தில் பாலாஜியின் பதவி பறிக்கப்பட்ட பின்னரும், விஜயபாஸ்கர், எம்.பி தம்பித்துரை ஆகியோருக்கு எதிராக தனி கோஷ்டியுடன் செயல்பட்டு வந்தார் செந்தில் பாலாஜி.
கரூர் மாவட்டத்தில் எது நடந்தாலும் தனித்தனியாகத்தான் நடத்துவார்களாம். வெள்ள நிவாரண நிதியைக்கூட தனித்தனியாகவே மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்துள்ளனர். இந்த நிலையில் செந்தில் பாலஜியின் ஆதரவாளர்கள் நீக்கப்பட்டதற்குக் காரணம் பஸ் டெப்போ மோதல் வழக்கு என்கின்றனர் அதிமுகவினர்.
கரூர் - கோவை ரோட்டில் ஒன்றியச் செயலாளர் பாஸ்கர் தனது காரில் சென்ற போது, தனியார் பஸ் டெப்போவில் இருந்து வெளியே வந்த பஸ் மோதியதாம் இதில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. பாஸ்கருக்கு ஆதரவாக, சம்பவ இடத்திற்கு வந்த கவுன்சிலர் தானேஸ் முத்துக்குமார், மாவட்ட பொருளார் முரளி ஆகியோரும் டெப்போவிற்கு வந்து டிரைவரை தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் வாட்ஸ் அப்பில் வலம் வந்தது. இதுபற்றி மேலிடத்திற்கு கரூர் மாவட்ட அதிமுகவினர் புகாரை தட்டிவிடவே , செந்தில் பாலாஜி ஆதரவாளர்களான, கரூர் மாவட்ட அ.தி.மு.க., பொருளாளர் முரளிதரன், மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞர் அணிச் செயலர் பாஸ்கரன், கரூர் நகராட்சி கவுன்சிலர் தானேஷ், மேலப்பாளையம் ஊராட்சி செயலர் விக்னேஷ் ஆகியோர், கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி உத்தரவிட்டுள்ளார் ஜெயலலிதா. கட்சி மேலிடத்தில் அதிரடியால் கரூர் மாவட்ட அதிமுகவில் உள்ள கோஷ்டியினர் அடங்கிப்போயுள்ளனர்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications