அமைச்சர், எம்.பி, மா.செ. முன்னிலையில் "பளார் பளார்".. மாஜி எம்.எல்.ஏ அடாவடி.. அதிமுகவினர் ஷாக்!
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் நடந்த அதிமுக கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ ஒருவர் அதிமுக நிர்வாகியை பளார் பளார் என அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அமைச்சர், எம்பி முன்னிலையில் இந்த அடிதடி மோதல் நடந்தது.
முதுகுளத்தூரில் ஒன்றிய கூட்டம் அமைச்சர் மணிகண்டன், எம்.பி. அன்வர் ராஜா முன்னிலையில் நடைபெற்றது. உள்ளாட்சி தேர்தல் குறித்த அதிமுக ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் முனியசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னாள் எம்எல்ஏவும், அதிமுக ஒன்றிய செயலாளருமான முருகன் வரவேற்றார்.

கூட்டத்தில் வெங்கலகுறிச்சி அதிமுக கிளைச்செயலாளர் முத்துமணி பேசுகையில், அனைத்து நிர்வாகிகளையும் பேச அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். இதைக் கேட்டதும் கோபமடைந்த முருகனின் ஆதரவாளர்கள் மற்றும் முத்துமணி ஆதரவாளர்களிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது திடீரென மேடையில் இருந்து முருகன் கீழே இறங்கி வந்து முத்துமணியின் கன்னத்தில் பளார் பளார் என அறைந்தார்.
அவரது ஆதரவாளர்களும் முத்துமணியைத் தாக்கினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அமைச்சரும், எம்.பியும் தலையிட்டு சண்டை போட்டவர்களை விலக்க விட்டு அமைதிப்படுத்தினர். கூட்டம் தொடர்ந்து நடந்தது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications