முத்துக்குமாரசாமி தற்கொலை: அக்ரி கிருஷ்ணமூர்த்தி, செந்திலுக்கு ஜாமீன் கிடைக்குமா?
மதுரை: நெல்லை வேளாண் அதிகாரி எஸ்.முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியும், தலைமைப் பொறியாளர் செந்திலும் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நாளை நடைபெற உள்ளது.
நெல்லை வேளாண்மைத்துறை அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை தொடர்பாக வேளாண்மைத்துறை முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வேளாண்மைத்துறை தலைமைப் பொறியாளர் செந்தில் ஆகியோர் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தலைமைப்பொறியாளர் செந்தில், அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ஜாமீன் கேட்டு, நெல்லை மாவட்ட முதன்மை செசன்சு நீதிமன்றத்தில் தனித்தனியாக மனு தாக்கல் செய்து இருந்தனர். இந்த மனுக்களை தள்ளுபடி செய்து நெல்லை நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து, தலைமைப்பொறியாளர் செந்தில் ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், சிபிசிஐடி போலீஸாரிடம் முத்துக்குமாரசாமி மனைவி அளித்த வாக்குமூலத்தில், பிப்ரவரி 20ஆம் தேதி தன் கணவர் இரவில் தூக்கமில்லாமல் தவித்ததாகவும், அவரிடம் கேட்டபோது அலுவலகத்தில் தனக்கு அதிக தொல்லைகள் தருவதாகவும் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.இந்த வாக்கு மூலம் ரயில்வே போலீஸாரிடம் முத்துக்குமாரசாமி அளித்த வாக்கு மூலத்துக்கு முரணாக உள்ளது.
முத்துக்குமாரசாமியின் நண்பர்கள் ராஜகோபால், அசோக்குமார் அளித்த வாக்குமூலத்தில், முத்துக்குமாரசாமி தங்களிடம் வேளாண்மைத் துறையில் 11 ஓட்டுநர்கள் நியமனம் செய்ததற்கு ரூ.11 லட்சம் தர வேண்டும் என தலைமைப் பொறியாளர் செந்தில் கேட்டு துன்புறுத்தி வருவதாகவும், இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் தான் கூறியதாகவும், அதை கேட்ட ஆட்சியர் கவலைப்பட வேண் டாம், விஷயத்தைதான் பார்த்துக் கொள்வதாகவும் கூறியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆட்சியர் கவலைப்பட வேண்டாம் என கூறியிருந்தும், முத்துக்குமாரசாமி ஏன் தற்கொலை செய்ய வேண்டும். இந்த வழக்கை ரயில்வே போலீஸார் விசாரித்துள்ளனர். அப்போது முத்துக்குமாரசாமியை மேல் அதிகாரிகள் துன்புறுத்தியதாக யாரும் கூறவில்லை. சிபிசிஐடி போலீஸார்தான் வழக்கின் திசையை மாற்றியுள்ளனர்.
முத்துக்குமாரசாமி தற்கொலை செய்துகொண்டதற்கு ஆதாரங்கள் எதுவும் இல்லை. முத்துக் குமாரசாமியின் மரணம் விபத்தாக இருப்பதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது. நான் ஏற்கெனவே உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளேன். ஏப். 5ஆம் தேதி முதல் சிறையில் உள்ளேன். மேலும் சிறையில் இருந்தால் உடல் நலம் பாதிக்கப்படும். எனவே, எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவும், தலைமை பொறியாளர் செந்தில் ஜாமீன் மனுவும் நீதிபதி கல்யாணசுந்தரம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் ஆஜரான அரசு வக்கீல் ராஜராஜன் ஜாமீன் வழக்கில் அரசு தலைமை வக்கீல் ஆஜராக இருப்பதால் நாளை விசாரணையை ஒத்திவைக்குமாறு நீதிபதியிடம் கேட்டுக்கொண்டார். இதையடுத்து அக்ரி கிருஷ்ணமூர்த்தி, செந்தில் ஆகியோரது ஜாமீன் மனுவை நாளை ஒத்திவைத்து நீதிபதி கல்யாணசுந்தரம் உத்தரவிட்டார். முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் இவர்கள் இருவருக்கும் ஜாமீன் கிடைக்குமா? என்பது நாளைய விசாரணையில் தெரியவரும்
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications