மகேந்திரன் போட்ட "முடிச்சு".. காதல் ரசம் சொட்ட சொட்ட.. மனைவிக்கு தந்த ப்ராமிஸ்.. மலைத்த திமுக.. வாவ்
கோவை மகேந்திரன்.. இவர் ஒரு முக்கிய தொழிலதிபர்.. மகேந்திரனுக்கென தனிப்பட்ட செல்வாக்கு படைத்த "பசையுள்ள" கூட்டம் ஒன்று கொங்குவில் எப்போதுமே இருக்கத்தான் செய்கிறது.
கடந்த எம்பி மற்றும் சட்டசபை தேர்தல்களில் கொங்குவில் மநீம பெற்ற வாக்குகளில் பிரதான பங்கு மகேந்திரனுக்கும் உண்டு என்பதை மறுக்க முடியாது.
மநீம: நீதி மய்யத்தின் துணைத் தலைவரான மகேந்திரன், கமலிடம் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, கட்சியை விட்டு வெளியேறினார்.. ஆனால் அடுத்த நாளே மகேந்திரனுக்கான டிமாண்ட் கூடியது. முதலில் அவருக்கு துண்டு விரித்து, சிக்னல் தந்தது திமுக மேலிடம்.. இதற்கு காரணம், கொங்குவில் பல காலமாகவே திமுகவின் பலம் எடுபடாமலேயே உள்ளதால், மகேந்திரனை கொண்டு கட்சியின் செல்வாக்கை உயர்த்த திட்டமிட்டதாக கூறப்பட்டது..
எதிர்பார்த்தபடியே திமுகவில் இணைந்தார் மகேந்திரன்.. அதுவும் அவரது ஆதரவாளர்கள் 78 பேருடன் அழைத்து கொண்டு, அறிவாலயத்தில் மகேந்திரன் நுழையும்போதே பெருத்த எதிர்பார்ப்பு அன்று எழுந்தது.. போதாக்குறைக்கு 11 ஆயிரத்திற்கும் அதிகமான தொண்டர்கள் திமுகவில் இணைய உள்ளதாக சொல்லி, அந்த லிஸ்ட்டை முதல்வர் ஸ்டாலினிடம் சமர்ப்பித்தபோது, இந்த எதிர்பார்ப்பு மேலும் எகிறியது. இதனால் திமுக மேலிடமே திக்குமுக்காடி போய்விட்டது.

லேட்டஸ்ட் வருகை: "லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக திமுகவுக்கு வந்துள்ளனர். தேர்தலுக்கு முன்பே வந்து இருந்தால் இன்னும் அதிக இடங்களில் வென்று இருக்கலாம். இவர்கள் முன்பே கட்சியில் இணைந்து இருந்தால் கொங்கு மண்டலத்தில் அதிக இடங்களை வென்று இருப்போம்" என்று அந்த நேரத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசிய பேச்சு மிகுந்த கவனத்தையும் பெற்றிருந்தது. மற்றொரு பக்கம் களப்பணியாற்றிய சிலருக்கும், ஸ்டாலினின் இந்த பேச்சு வருத்தத்தை தந்ததாகவும் கொங்கு திமுகவில் முணுமுணுக்கப்பட்டது.
எனினும் மகேந்திரனுக்கு எந்த மாதிரியான பொறுப்பு தரப்படும்? கொங்குவில் ஏற்கனவே சில திமுக சீனியர்கள் இருந்தாலும், மகேந்திரனுக்கான பொறுப்பு கட்சியின் வளர்ச்சிக்கு மேலும் உதவுமா? சரிந்து போன செல்வாக்கை, கொங்குவில் தூக்கி நிறுத்த மகேந்திரன் எந்த அளவுக்கு பங்களிப்பை தருவார் என்ற எதிர்பார்ப்புகளும் கூடிக் கொண்டேவந்தன..
ஐடி விங்: பிறகு, மகேந்திரன் மேயர் பதவியை கேட்டதாகவும், மற்றொரு பக்கம் கொங்குவை முன்னிறுத்தி கட்சியிலேயே முக்கிய பொறுப்பு மகேந்திரனுக்கு வழங்கப்படலாம் என்றும் இருவேறு தகவல்கள் கசிந்தன.. இறுதியில், ஐடி விங் பிரிவில் இணைச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இப்போது, திமுகவிற்கு ஆதரவாக சோஷியல் மீடியாவில் மகேந்திரன் களமாடி வருகிறார். இந்தநிலையில் மகேந்திரனின் ஒரு ட்வீட் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. தன்னுடைய மனைவியின் பிறந்தநாளுக்கு மகேந்திரன் வாழ்த்து சொல்லி உள்ளார்..
அந்த பதிவில், ''இன்று நீங்கள் உங்கள் பிறந்தநாளை கொண்டாடுகிறீர்கள். உங்களின் அன்பும், ஆதரவும், வலிமையும் எனது உத்வேகத்தின் நிலையான வளமாக உள்ளது. நமது குடும்ப நலத்திற்காக நீங்கள் எண்ணற்ற தியாகங்களை செய்துள்ளீர்கள் மற்றும் செய்து கொண்டே இருக்கிறீர்கள். எங்களை மகிழ்ச்சியாகவும், ஒற்றுமையாகவும் வைத்திருப்பதிலும், ஆரோக்கியத்துடன் வழிநடத்துவதிலும் நீங்கள் முதன்மையானவராக இருக்கிறீர்கள்.

அர்ப்பணிப்புகள்: தன்னலம் இல்லாமல் அர்ப்பணிப்புடன் செயல்படும் உங்களுக்கு நான் எப்போதும் நன்றி உடையவனாக இருப்பேன். எத்தனையோ சிரமமிக்க தருணங்களில் எனக்கு நீங்கள் தந்த ஆதரவு, என்னை அத்தகைய கடுமையான நாட்களை வெற்றிகரமாக கடக்க உதவியது.. நீங்கள் மட்டும் இல்லையென்றால் அது நிச்சயம் சாத்தியமே கிடையாது என்பதை பலமுறை உணர்ந்திருக்கிறேன்.. அளவுகடந்த அன்பு செலுத்துவது என்பதை உங்களிடத்தில் தான் தெரிந்து கொண்டேன்.
என்னை வழிநடத்தும் பேரொளியாக நீங்கள் இருக்கிறீர்கள். இந்த பிறந்தநாளில் உங்களிடம் ஒரு உறுதிமொழியை கொடுக்க ஆசைப்படுகிறேன்.. என்னுடைய வாழ்க்கை நிறைவடையும் வரையிலும், உங்களிடத்தில் உள்ள அன்பும், ஆதரவும் குறையாது.. மேலும் ஒவ்வொரு நாளும் உங்களை கொண்டாடுவதை நான் உறுதி செய்வேன்" என்று அதில் மகேந்திரன் பதிவிட்டுள்ளார். காதல் ரசம் சொட்ட சொட்ட, பிரியமான மனைவிக்கு மகேந்திரன் பதிவிட்ட இந்த ட்வீட், தற்போது பேசுபொருளாகி உள்ளது.
-
மதுரை வடக்கு வேட்பாளர் கோ.தளபதி.. மதுரையில் 7 தொகுதிகளில் களமிறங்கும் திமுக.. யாருக்கு வாய்ப்பு? -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
கள்ளக்குறிச்சி, பெரியகுளம் உள்பட விசிக போட்டியிடும் 8 தொகுதிகள் எவை! வெளியானது பட்டியல் -
170... திமுக மாஸ்டர் பீஸ் தலைகீழா போகுதா? கியரை மாற்றிய அதிமுக! லட்டு மாதிரி கையில் முத்தரையர் ஓட்டு -
கோவை திமுகவை துரத்தும் 25 வருட தோல்வி.. செந்தில்பாலாஜி மூலம் மாறுமா களம்.. ஸ்டாலின் பிளானின் பின்னணி -
காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகள் அறிவிப்பு.. சிட்டிங் சீட்களில் 2-ஐ விட்டுக் கொடுத்தது காங்! -
திமுக அமைச்சர்களின் தொகுதிகளில் களம் இறங்கும் அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? இதோ லிஸ்ட்! -
தவெக பரப்புரைக்கு தடைபோடுவதா.. திடீர் பள்ளம், தடுப்பு எங்கிருந்து வந்துச்சு? கடுப்பில் விஜய் அறிக்கை -
விசிகவுக்கு திருப்போரூர், பெரியகுளம் உள்பட 8 தொகுதிகள்! உத்தேச பட்டியல் வெளியீடு! -
கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஷாக் கொடுத்த வேலுமணி.. அதிமுகவுக்கு தாவிய திமுக கவுன்சிலர்! -
திமுக கூட்டணியில் தொகுதி லிஸ்ட்: வேட்பாளர் பட்டியல் இன்னும் வராதது ஏன்? பின்னணியில் 3 முக்கிய காரணம் -
234/234 DMK seat sharing: தொகுதி பங்கீடு ஓவர்! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதிகள்! லிஸ்ட்!












Click it and Unblock the Notifications