ஆதார் கார்டு.. அதுல உங்களுடைய நம்பர் ஞாபகம் இருக்கா.. இதோ இப்படிதான் அதை கண்டுபிடிக்கணும்.. சூப்பர்ல
சென்னை: ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்ட உங்களுடைய மொபைல் எண் நினைவிருக்கிறதா? அதை எப்படி கண்டுபிடிப்பது தெரியுமா?
ஆவணங்கள் என்றாலே அதை நாம் எந்நேரமும் பத்திரப்படுத்த வேண்டியதாயிருக்கிறது.. எங்கே செல்வதானாலும், அவைகளை பாதுகாப்புடன் கொண்டு சென்று, வீடு திரும்ப வேண்டுவது அவசியமாகிறது..
அடையாள அட்டைகளை கூட பாக்கெட்டில் எடுத்து செல்ல வேண்டியிருந்தது... ஆனால், தொழில்நுட்பம் வளர்ந்த பிறகு மத்திய, மாநில அரசுகள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகின்றன... முக்கிய ஆவணங்களை சாஃப்ட் காப்பி வடிவில் செல்போனிலேயே வைத்துக்கொள்ள முடியும்.

ஆவணங்கள்: அதாவது, ஆவணங்களை, டிஜிட்டல் வடிவத்தில் இருப்பதை அரசே அனுமதி அளிக்கிறது... ஆனால் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட வடிவத்திலும் அவைகள் இருக்க வேண்டும்... ஆதார் அட்டை , பான் கார்டு , டிரைவிங் லைசென்ஸ் போன்ற ஆவணங்களை இப்போது ஸ்மார்ட்போனிலேயே பதிவிறக்கம் செய்து எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். மேலும், ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு கார்களை பெறும் முறைகளையும் எளிமையாக்கியுள்ளது மத்தியஅரசு..
அதேபோல, ஆதார் கார்டில் எந்த மொபைல் நம்பர், மின்னஞ்சல் இணைக்கப்பட்டுள்ளது, என்பது குறித்து பலரும் அறியாமல் இருக்கின்றனர்.. அதாவது, ஆதார் சரிபார்ப்பு செய்யும்போது ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் அல்லது ஈமெயில் ஐடியில் பயனர் சரிபார்ப்பு குறியீடு அனுப்பப்படும்... அதை வைத்தே ஆதாரில் அப்டேட் செய்ய முடியும்...

சரிபார்ப்பு: ஆனால், நம்மில் பலருக்கு எந்த மொபைல் எண்ணுடன் ஆதார் அட்டையை இணைத்தோம் என்பதை மறந்திருப்போம்.. ஏனெனில், ஆதார் நமக்கு முதன்முதலில் வழங்கப்பட்ட போது பழைய செல்போன் நம்பரை வைத்திருப்போம்.. நிறையப் பேர் அந்த நம்பரையே மாற்றியிருப்பார்கள்.. சிலரிடம் அந்த செல்போன் நம்பர் இருந்திருக்காது.. இதையும் ஆன்லைன் மூலமாகவே தெரிந்து கொள்ள முடியுமாம்.. அதற்கான புதிய அப்டேட்டை UIDAI இப்போது வெளியிட்டுள்ளது.
ஆன்லைன் வசதி: ஆன்லைன் மூலமாக ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணை கண்டுபிடிக்கவே இந்த புதிய சேவையாகும்.. முதலாவதாக UIDAI ன் அதிகாரபூர்வமான இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று, எனது ஆதார் விருப்பத்தை என்பதை கிளிக் செய்ய வேண்டும்... அடுத்ததாக, Verify Mobile/Aadhaar என்பதை கிளிக் செய்து மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடியை சரிபார்த்து கொள்ளலாம். மேலும், ஆதார் அட்டை பயனர்கள் தங்கள் மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் ஐடியை ஆதாருடன் இணைக்க விரும்பினால், உங்கள் அருகிலுள்ள ஆதார் மையத்திற்குச் சென்று அதையும் செய்துகொள்ளலாம்..!!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications