பழைய ரூ. 500, ரூ. 1000 நோட்டுகளை வங்கிகளில் இன்று மாற்றிக் கொள்ளலாம்..!
பழைய ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுகளை மாற்றிக் கொள்ள வசதியாக, ஒருநாள் விடுமுறைக்குப் பின் இன்று மீண்டும் வங்கிகள் திறக்கப்பட்டுள்ளன.
சென்னை: ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, ஒருநாள் விடுமுறைக்குப் பின் இன்று மீண்டும் வங்கிகள் திறக்கப்பட்டுள்ளன. மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள காரணத்தால் வங்கிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நாடு முழுவதும் பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். மேலும் மாற்றம் காரணமாக நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கும் நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இந்த ஒருநாள் விடுமுறையில், பழைய ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுகளை மக்கள் மாற்றிக் கொள்ள வசதியாக வங்கிகள் தேவையான ஏற்பாடுகளைச் செய்தன. பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மாற்றிக் கொள்ள அனைத்து வங்கிக் கிளைகளிலும் சிறப்புக் கவுன்ட்டர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டன.
அதன் தொடர்ச்சியாக இன்று மீண்டும் வங்கிகள் திறக்கப்பட்டுள்ளன. மக்கள் தங்களிடம் உள்ள பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து விட்டு சிறப்பு கவுண்டர்களில் இன்று புதிய நோட்டுகளைப் பெற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த சிறப்புக் கவுன்ட்டர் வரும் டிசம்பர் 30-ஆம் தேதி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு படிவத்தை பூர்த்தி செய்து நாள் ஒன்றுக்கு அதிகபட்சம் ரூ.4,000 வரை பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களில் மக்கள் மாற்றிக் கொள்ளலாம். அனைத்து வங்கிக் கிளைகளிலும் இந்த சிறப்புப் படிவம் இலவசமாக அளிக்கப்படும்.
பலத்த போலீஸ் பாதுகாப்பு:
ஏடிஎம் மையங்கள் இன்றும் விடுமுறை என்பதால், தங்களிடம் உள்ள பழைய நோட்டுகளை மாற்றிக் கொள்ளவும், புதிதாக வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கவும் வங்கிகளில் மக்கள் கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த வங்கிகள் மற்றும் அஞ்சலகங்கங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் ரோந்து வாகனங்கள் மூலம் கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபடுகின்றனர். சுமார் 3 ஆயிரம் போலீசார் சென்னையில் மட்டும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications