டிடிக்கு போலி அக்கவுண்ட்... பாவனா அக்கவுண்ட் ஹேக்... டிவி ஆங்கர்களுக்கும் சோதனை
விஜய் டிவி தொகுப்பாளினிகள் டிடி, பாவனாவிற்கு இது சோதனைக்காலம்தான். இருவரின் டுவிட்டர் கணக்குகளிலுமே சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சென்னை: விஜய் டிவி தொகுப்பாளினி டிடியின் பெயரில் போலி கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. இதே போல விஜய் டிவி தொகுப்பாளினி பாவனாவின் டுவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. நடிகைகள், டிவி தொகுப்பாளினிகளுக்கு இது சோதனையான காலம்தான் போல. பேக் அக்கவுண்ட், ஹேக் செய்வது தொடர்ந்து வருகிறது.
சுசீலீக்ஸ் டுவிட்டரில் வெளியானதில் இருந்தே கோலிவுட், சின்னத்திரை வட்டாரங்களில் பலரும் கதிகலங்கித்தான் போயிருக்கின்றனர். யார் வெளியிடுகிறார் என்பதை கண்டுபிடிக்கிறார்களோ இல்லையோ பாதிக்கப்பட்டவர்கள் பலரும் கருத்து கூறாமல் அமைதி காத்து வருகின்றனர்.

விஜய்டிவியின் டிடி
காபி வித் டிடி நடத்திய திவ்யதர்ஷினிக்கு தனி ரசிகர்கள் உள்ளன. சினிமாவிலும் நடித்துள்ளார் டிடி. தனுஷ் இயக்கும் பவர் பாண்டி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
சினிமாவில் நடிக்க தொடங்கியதிலிருந்து அவர் டிவி நிகழ்ச்சிகளில் அதிகமாக பங்கேற்பதை தவிர்த்து வருகிறார்.

டுவிட்டர் கணக்கு
டுவிட்டரில் கணக்கு வைத்துள்ள டிடியை ஏராளமானோர் பின்தொடர்கின்றனர். இதில் தினசரியும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார் டிடி. இந்தநிலையில் இவரைப் போன்றே டுவிட்டரில் போலி கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. அதில் அவரைப்பற்றிய கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
|
அது என்னுடையதில்லை
இதனால் சுதாரித்த டிடி, இது நான் இல்லை. என் டுவிட்டர் கணக்கு அதிகாரப்பூர்வமானது என்று தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளார். பாடகி சுசித்ரா டுவிட்டர் பக்கத்தில் டிடியும், இன்னொருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் டிடியின் டுவிட்டர் கணக்கில் அச்சு அசலாக போலி கணக்கு தொடங்கியுள்ளனர்.

டிவி தொகுப்பாளினி பாவனா
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் தொகுப்பாளினி பாவனாவின் டுவிட்டர் கணக்கை ஹேக் செய்து விட்டார்களாம். அவரது சமூகவலைத்தள பக்கத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை சில தினங்களாக பதிவிட்டுள்ளனர். அவற்றை உடனடியாக நீக்கிவிட்டார் பாவனா.
|
ஹேக் பண்ணிட்டாங்க
என்னுடைய டுவிட்டரில் இருந்த தவறான டுவிட்களை டெலிட் செய்து விட்டேன். என்னுடைய கணக்கை ஹேக் செய்து விட்டார்கள் அது யார் என்று விரைவில் கண்டுபிடிப்பேன் எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி என்றும் பாவனா பதிவிட்டுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications