போலி இருப்பிடச் சான்றிதழ்.. மேலும் 2 மாணவர்களுக்கு சம்மன்.. இன்று ஆஜராக உத்தரவு
போலி இருப்பிடச் சான்றிதழ் கொடுத்து நீட் கவுன்சலிங்கில் இடம்பெற்ற கேரளாவைச் சேர்ந்த மேலும் இரு மாணவர்களுக்கு போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது.
சென்னை: இரட்டை இருப்பிடச் சான்றிதழ் கொடுத்த விவகாரத்தில் கேரளாவை சேர்ந்த மேலும் இரு மாணவர்களுக்கு போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது.
நீட் தேர்விலிருந்து விலக்கு கிடைக்குமா கிடைக்காதா என்று காத்திருந்து காத்திருந்து மாணவர்கள் குழப்பம் அடைந்தனர். ஒரு வழியாக தேர்வு நடைபெற்றது. எனினும் மருத்துவ கலந்தாய்வை பிளஸ் 2 அடிப்படையில் நடத்த வேண்டும் என்றும் நீட் அடிப்படையில் நடத்த வேண்டும் என்று வழக்கு போடப்பட்டது.
இதையடுத்து ஒருவழியாக நீட் அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்படி கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு தொடங்கியது. இந்நிலையில் நேற்று ஓமந்தூரார் தோட்டத்தில் நடைபெற்ற மருத்துவ கலந்தாய்வுக்கு கேரளாவை சேர்ந்த சில மாணவர்கள் வந்தனர்.
அவர்களது இருப்பிட சான்றிதழை சரிபார்த்த போது அவர்கள் கேரளாவில் நடைபெற்ற கவுன்சலிங்கிலும் கலந்து கொண்டது தெரியவந்தது. விசாரணையில் போலி இருப்பிடச் சான்றிதழ் பெற்று அதை வைத்து தமிழகத்தில் மருத்துவ படிப்பில் சேர முற்பட்டது தெரியவந்தது.

7 பேர் சிக்கினர்
மொத்தம் 7 மாணவர்கள் போலியாக முகவரி சான்றிதழ் அளித்ததும் அதில் 3 பேருக்கு மருத்துவ படிப்பில் சேர வாய்ப்பு வழங்கப்பட்டு விட்டதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து மற்ற 4 பேருக்கு கலந்தாய்வில் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டது

போலீஸ் விசாரணை
பொதுவாக இருப்பிடச் சான்றிதழானது 5 ஆண்டுகள் ஒரே இடத்தில் வசித்தால் மட்டுமே வழங்கப்படும். இவ்வாறு இவர்களுக்கு போலியாக சான்றிதழ் வழங்கிய அதிகாரி குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

3 பேருக்கு சம்மன்
போலி இருப்பிட சான்றிதழ் கொடுத்த கேரளாவை சேர்ந்த ஆசிப் சுலைமான் என்ற மாணவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ள போலீஸார் அவர் நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளனர். இதைத் தொடர்ந்து கேரளாவைச் சேர்ந்த முகமது நிஜாஸ், இஜாஸ் முகமது ஆகியோருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இன்று ஆஜராக உத்தரவு
அதன்படி இன்று மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் மூன்று பேரும் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே அவர்களுக்கு போலி சான்றிதழ் வழங்கிய அரசு அதிகாரி குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவர்கள் 7 பேர் மட்டும்தானா அல்லது இன்னும் தோண்ட தோண்ட பூதம் கிளம்புமா என்று போலீஸார் வெவ்வேறு கோணத்தில் விசாரணையை முடுக்கியுள்ளனர்.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து?












Click it and Unblock the Notifications