நெல்லையில் போலி அழைப்புகள் மூலம் ஆம்புலன்ஸ் அலைக்கழிப்பு... விஷமிகளின் வீண் விளையாட்டு
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் விஷமிகள் வேண்டாத அலைப்புகள் மூலம் உயிர் காக்கும் ஆம்புலன்சை அலைய விடுவதால் உயிர்கள் பலியாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதில் தீயணைப்பு படையினரும் சிக்கி தவித்து வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி தலைமை நிலையம் பாளையங்கோட்டையில் உள்ளது. இதன் கீழ், பேட்டை, வள்ளியூர், திசையன்விளை நாங்குநேரி, சேரன்மகாதேவி, ஆலங்குலம், அம்பை, தென்காசி, செங்கோட்டை, சுரண்டை, கடையநல்லூர், சங்கரன்கோவில், வாசுதேநல்லூர் ஆகிய இடங்களிலும் தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. பாளையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நான்கு பெரிய தீயணைப்பு வண்டிகளும், சிறிய 2 தீயணைப்பு வண்டிகளும் உள்ளன.

இங்கு 24 மணி நேரமும் மூன்று ஷிப்ட்டில் 14 பேர் பணியாற்றி வருகின்றனர். சமீப காலமாக பாளை தீயணைப்பு நிலையத்துக்கு போலி அழைப்புகள் அதிக அளவில் வருகின்றன. இதை உண்மை என கருதி தீயணைப்பு நிலைய வீரர்கள் வாகனத்தில் விரைகின்றனர். ஆனால் அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்பதால் அவர்கள் அலைக்கழிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் வாகனங்களுக்கு எரிபொருள், வீரர்கள் உழைப்பு வீணாகி வருகிறது.
இதில் ஆம்புலன்சும் தப்பவில்லை. மாலையில் பாளை தீயணைப்பு நிலையத்துக்கு செல்போனில் தொடர்பு கொண்டவர் தன் நண்பர் வண்ணார்பேட்டை வடக்கு பைபாஸ் சாலையில் பாலம் அருகே ரயில்வை பாலம் பகுதியில் குதித்து விட்டதாகவும் காப்பாறும் படியும் அழுதபடி கூறியுள்ளார். அதன்பேரில் 108 ஆம்புலன்சுக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்தனர் 108 ஆம்புலன்ஸ் குழுவினர். ஆனால் அங்கு அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்பதும் அத போலி அழைப்பு என்பதும் தெரிய வரவே ஆம்புலன்ஸ் ஊழியர்கள் திரும்பி சென்றனர். இது குறித்து அந்த நபரை செல்போனில் அழைக்கவே அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதை தவிர்க்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications