கோவையில் ரூ.83 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்... நோட்டு அடிக்கும் இயந்திரமும் சிக்கியது
கோவையில் ரூ.83 லட்சம் கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கோவை: கோவையில் போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது ரூ. 83 லட்சம் மதிப்பிலான கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக இரு சக்கர வாகனத்தில் சென்ற ஒருவரிடம் விசாரணை நடத்தப்படுகிறது.
கோவை சாய்பாபா காலனியில் போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் சென்ற ஆனந்தன் என்பவரை பிடித்து சோதனை செய்தனர்.

அப்போது அவரிடம் கட்டு, கட்டாக பணம் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் அனைத்துமே கள்ளநோட்டுகள் என தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து ரூ. 83 லட்சம் கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணையில் கோவை வேலாண்டிபாளையம்- தடாகம் சாலையில் ஒரு அலுவலகம் செயல்படுவதாக தெரியவந்தது. அங்கு சென்று சோதனை நடத்திய போது கள்ளநோட்டு அச்சடிக்கும் இயந்திரம் கண்டறியப்பட்டது. அந்த இடத்தில் இருந்த கள்ளநோட்டுகளையும் பறிமுதல் செய்த போலீஸார் இந்த சம்பவத்தில் தொடர்புடைய கும்பலை தேடி வருகின்றனர்.
-
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications