கள்ள ஓட்டு பற்றி பேசிய கமலுக்கு கள்ள ட்வீட் போட்ட நெட்டிசன்கள்
சென்னை: கமல் ஹாஸன் கள்ள ஓட்டு பற்றி பேசியுள்ள நிலையில் நெட்டிசன்கள் கள்ள ட்வீட் போட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலக நாயகன் கமல் ஹாஸன் கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது வாக்களிக்க சென்ற இடத்தில் அவர் வாக்கை யாரோ கள்ள வாக்காக போட்டது தெரிய வந்து அதிர்ச்சி அடைந்தார். இந்நிலையில் வரும் சட்டசபை தேர்தலில் வாக்களிக்கலாம் என்று இருந்த அவருக்கு மேலும் ஒரு அதிர்ச்சி ஏற்பட்டது.

வாக்காளர் பட்டியலில் அவர் பெயர் இல்லை என்று தெரிவிக்கப்பட்டதாக கமல் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கமல் ஹாஸனின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருப்பது போன்ற ட்வீட்டை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ட்விட்டரில் வெளியிட்டது போன்று ஒரு ட்வீட் தீயாக பரவியுள்ளது.
அந்த ட்வீட்டில், தலைமை தேர்தல் அதிகாரி வாக்காளர் பட்டியலில் கமலின் பெயர் இருப்பதை புகைப்படத்துடன் குறிப்பிட்டு அவரை வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இதையடுத்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்திற்கு சென்று பார்த்தால் அப்படி எதுவுமே இல்லை.
கள்ள ஓட்டு பற்றி பேசிய கமலுக்கு பதில் அளிக்க கள்ள ட்வீட் போட்டு நெட்டிசன்கள் சேட்டை செய்துள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications