இன்னாபா இது... "மொட்டை" ராஜேந்திரன் பெயரில் "டுபாக்கூர்" டிவிட்டர்!
சென்னை: மொட்டை ராஜேந்திரன் பலருக்கு கிலி ஏற்படுத்தி்த்தான் வழக்கம். தற்போது அவரை வைத்து ஒரு குரூப் காமெடி செய்து வருகிறது. அவரது பெயரில் டிவிட்டர் பக்கம் தொடங்கி சிலர் தேவையில்லாத வேலைகளைச் செய்து வருகின்றனராம்.
கொடூர வில்லனாக நான் கடவுள் படத்தில் பாலாவால் அடையாளம் காட்டப்பட்டவர் ராஜேந்திரன். செம மொட்டையாக இருப்பதால் இவருக்கு மொட்டை ராஜேந்திரன் என்ற கெட்டப் பெயரும் உண்டு.

அதிரடி வில்லனாக வலம் வந்த ராஜேந்திரன் ஒரு நல்ல நாள் பார்த்து காமெடி வில்லன் ஆனார். பின்னர் முழு நேர காமெடியனாகி விட்டார். ஏகப்பட் படங்களில் நடித்து வரும் ராஜேந்திரன் விஜய், அஜீத்துடனும் இணைந்து நடித்து அதகளப்படுத்தி விட்டார்.
அவரது பெயரில் பேஸ்புக்கில் ஒரு பக்கம் உள்ளது. ஆனால் டிவிட்டரில் அவர் இல்லை. இந்த நிலையில் யாரோ ஒரு பிரகஸ்பதி @Rajendran_offl என்ற பெயரில் கணக்குத் தொடங்கி விட்டார். இதனால் மொட்டை ராஜேந்திரன் தரப்பு அதிர்ச்சியானது.
அந்த டிவிட்டர் கணக்கிலிருந்து தேவையில்லாமல் பல சர்ச்சைக்குரிய கருத்துக்களைப் பதிவிட்டு வந்துள்ளன். இதையடுத்து இன்று ராஜேந்திரன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். உரிய நடவடிக்கை எடுப்பதாக அவருக்கு சைபர் கிரைம் அதிகாரிகள் உறுதியளித்தனர்.

தற்போது அந்த டிவிட்டர் கணக்கைக் காணவில்லை. தொடங்கியவர்களே முடக்கி விட்டார்களா அல்லது போலீஸ் முடக்கியதா என்று தெரியவில்லை.
மொட்டை ராஜேந்திரன் வாழ்க்கையில் குட்டையைக் குழப்பி இன்பம் காணத் துடிப்பது யாரா இருக்கும்??
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications