திருப்பூர்: கடன் தொல்லையால் மனைவி, 2 மகன்களுடன் பனியன் நிறுவன அதிபர் தற்கொலை!
திருப்பூர்: கடன் தொல்லை காரணமாக பல்லடம் கணபதி பாளையத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உடல்களை கைப்பற்றிய போலீசார் தற்கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் பொங்கலூரை சேர்ந்தவர் தாமரைக்கண்ணன்,45. இவர் பல்லடம், கணபதிபாளையம் அருகேயுள்ள அல்லாலபுரம் பகுதியில் பனியன் நிறுவனம் வைத்துள்ளார். அந்த நிறுவனத்தின் 3வது மாடியில் குடியிருந்து வருகிறார்.

இன்று காலை 5 மணிக்கு தாமரைக்கண்ணனை, அவரது தந்தை மொபைல் போனில் தொடர்பு கொண்டார். நீண்ட நேரமாகியும் மொபைல் போனை யாரும் எடுக்கவில்லை. இதனையடுத்து அங்கிருந்தவர்கள் வீட்டின் கதவை உடைத்து வந்து பார்த்தபோது, ஹாலில் தாமரைக்கண்ணன் தூக்கில் தொங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.
பக்கத்து அறையில், அவரது மனைவி பிரபாவதி, மற்றொரு அறையில் அவரது மகன்கள் தனுஷ்,14, அனுஷ்10 வாயில் டேப் வைத்து ஒட்டி தூக்கில் தொங்கியவாறு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. கடன் தொல்லை காரணமாக அவர்கள் தற்கொலை செய்திருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்திலேயே திருப்பூரில்தான் அதிக தற்கொலைகள் நிகழ்வதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. பனியன் தொழிலாளர்கள், உரிமையாளர்கள் பலரும் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாகி வருகிறது. தற்கொலைகளை தடுக்க உரிய நடவடிக்கையும், ஆலோசனையும் வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications