கொடுமை.. பயிர் கருகியதால் மனம் உடைந்த விவசாயி தீக்குளித்து தற்கொலை.. திருவாரூரில் சோகம்
நீரின்றி பருத்தி கருகியதால் மனம் உடைந்த விவசாயி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் திருவாரூரில் பதற்றம் நிலவி வருகிறது.
திருவாரூர்: நீர் இல்லாமல் பயிர்கள் காய்ந்த மனவேதனையில் விவசாயி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து விவசாயிகளின் தற்கொலை நடைபெற்று வருவது விவசாயிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் காப்பணாமங்கலம் என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் ரமேஷ். 45 வயதான இவர் ஒரு விவசாயி. தனது ஒரு ஏக்கர் நிலத்தில் பருத்தி சாகுபடி செய்திருந்தார்.
கடந்த ஆண்டு இரண்டு பருவமழைகளும் பொய்த்துப் போனது. மேலும் காவிரி நீரும் நமக்கு கிடைக்கவில்லை. இதனால் நீரின்றி பயிர் அத்தனையும் கருகியுள்ளது. இதனால் மன வேதனையில் ரமேஷ் இருந்ததாகக் கூறப்படுகிறது.

அடகு வைத்த நகை
இருக்கும் குறைந்த அளவு நீரில் பயிர் சாகுபடி செய்துவிடலாம் என்று எண்ணிய விவசாயி ரமேஷிற்கு இது பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. மேலும் நகைகளை அடகு வைத்தே விவசாயத்திற்கான செலவுகளை செய்துள்ளார்.

தீக்குளித்து தற்கொலை
இந்நிலையில் விவசாயி ரமேஷ், கொல்லைப்புறத்திற்கு சென்று மண்ணெண்ணெய் தனது உடல் மேல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை கொண்டார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பிரேத பரிசோதனை
ஆனால், அவர் உயிர் பிரிந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். தற்போது அரசு மருத்துவமனையில் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

தொடர் தற்கொலை
இந்த தற்கொலை பற்றி குடவாசல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் வறட்சி பலியாகியுள்ள நிலையில், ரமேஷின் இறப்பு விவசாயிகளை கவலை அடையச் செய்துள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications