"2 முறை போர் போட்டும் வெள்ளாமைக்கு தண்ணி வரலையே” - விரக்தியில் விஷம் குடித்த மதுரை விவசாயி மரணம்!
மதுரை: மதுரை மாவட்டத்தில் விவசாயத்திற்காக இரண்டு முறை போர் போட்டும் தண்ணீர் வராத காரணத்தினால் விரக்தியடைந்த விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி, தொட்டப்பநாயக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பால்ராஜ். இவர் தனது 6 ஏக்கர் நிலத்தில் அவரை சாகுபடி செய்திருந்தார். இதற்கு தண்ணீர் குறைந்த காரணத்தினால் 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி போர் போட்டிருக்கிறார். ஆனால் போர் போட்ட இடத்தில் தண்ணீர் வரவில்லை.

இந்நிலையில் அவர் நேற்று இரவு போர் போட்ட இடத்திலேயே விஷம் அருந்தி மயக்க நிலையில் கிடந்துள்ளார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் இதனை பார்த்து, உடனே உசிலம்பட்டி அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு பால்ராஜை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
கடும் வறட்சியில் தவிக்கும் உசிலம்பட்டி பகுதியில் தண்ணீர் தேவைக்காக இருமுறை தன்னுடைய நிலத்தில் விவசாயி பால்ராஜ் போர் போட்டிருக்கிறார். இரண்டு முறை முயற்சிக்கு பிறகும் தண்ணீர் வராத விரக்தியில் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிகிறது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் சோகம் நிலவி வருகின்றது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications