தேசியப் பறவைக்கு “விஷம்” – 5 மயில்களைக் கொன்ற விவசாயிக்கு வலை
கோவை: கோவையில் மயில்களுக்கு விஷம் வைத்து கொன்று பக்கத்து தோட்டத்தில் போட்ட விவசாயி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், காளப்பட்டியை சேர்ந்தவர் ராமசாமி நாயக்கர். இவருக்கு சொந்தமான தோட்டத்தில் கடந்த இரு நாளுக்கு முன் ஒரு ஆண் மயில் மற்றும் நன்கு பெண் மயில்கள் என மொத்தம் ஐந்து மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன.

இது குறித்து, ராமசாமி நாயக்கர் கோவை வடக்கு வனத்துறையினருக்கும், கோவில்பாளையம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளார். வனத்துறையினரும், போலீசாரும் விரைந்து சென்று இறந்து கிடந்த 5 மயில்களையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
இதை தொடர்ந்து மண்டல வன உயிரின பாதுகாப்பு அலுவலர் சேகர் மற்றும் கோவை வன அலுவலர் பன்னீர்செல்வம் ஆகியோர் மயில்கள் மர்மமான முறையில் இறந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
அதன்படி, காளப்பட்டியை சேர்ந்த விவசாயி ராமதாஸ் என்பவர் தோட்டத்தில் வெங்காயம் பயிர் செய்துள்ளார். மயில்கள் வெங்காயத்தை நாசப்படுத்தியதால் ஆத்திரம் அடைந்து, உரத்துக்கு பயன்படுத்தப்படும் "ஆர்கானிக் பாஸ்பரஸ்" என்ற ரசாயனத்தை, அரிசியில் கலந்து மயில்களுக்கு வைத்துள்ளார். இதனை தின்ற மயில்கள் செத்துள்ளன.
தனது தோட்டத்தில் மயில்கள் செத்து கிடந்தால் பிடிபட்டு விடுவோம் என்று கருதி, கொல்லப்பட்ட மயில்களை பக்கத்து தோட்டத்தில் கொண்டுபோய் போட்டுவிட்டு இப்போது தலைமறைவாகியுள்ளார்.
அவரை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவர் மீது, வனஉயிர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது. பின்னர் இறந்த 5 மயில்களையும் வனத்துறையினர் பரிசோதனை செய்து அடக்கம் செய்தனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications