விவசாயிகளுக்கு பச்சை துரோகம் செய்கிறது தமிழக அரசு.. தூக்கி எறிவதே முதல் பணி.. விவசாயிகள் பாய்ச்சல்
விவசாயிகள் யாரும் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளதற்கு விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சென்னை: தமிழகத்தில் வறட்சியால் விவசாயிகள் யாரும் தற்கொலை செய்யவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாணப் பத்திர தாக்கல் செய்துள்ளது.
மேலும், உடல்நலக்குறைவு, வயது முதிர்வினாலேயே விவசாயிகள் 82 பேர் உயிரிழந்தனர் என்றும் அதில் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.
இதற்கு விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன. விவசாயிகள் சங்கத்தின் தலைவர் தெய்வசிகாமணி இதுகுறித்து கூறியதாவது:

துரோகம்
தமிழக அரசு விவசாயிகளுக்கு செய்த பச்சை துரோகமாகத்தான் இதனைப் பார்க்கிறோம். 38 ஆயிரம் கோடிக்கு மேல் வறட்சி நிவாரணம் வேண்டும் என்று மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பிய தமிழக அரசு விவசாயிகள் ஒருவரும் இறக்கவில்லை என்று பிரமாணப் பத்திரத்தை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

வயிற்றில் அடித்த அரசு
இது முன்னுக்குப் பின் முரணானது. இந்த அரசுக்கு விவசாயிகள் மீது அக்கறை கிடையாது. இந்த அரசு விவசாயிகளை வஞ்சிக்கிறது. ஏமாற்றுகிறது. இந்த பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளதன் மூலம் விவசாயிகளின் வயிற்றில் அடித்துள்ளது.

இரக்கம்
விவசாயிகளின் தற்கொலையை தடுக்க வேண்டும் என்ற எண்ணமே இந்த அரசுக்கு இல்லை. இது சுயநலம் பிடித்த, இரக்கமில்லாத ஒரு அரசாகத்தான் நான் இதைப் பார்க்கிறேன்.

நிர்பந்தம்
இந்த அரசு இனி விவசாயிகளுக்கு பயன்படாது. விவசாயிகளை காப்பாற்றாது. விவசாயிகள் மீது அக்கறை இல்லை. இந்த அரசை அப்புறப்படுத்துவதற்கான போராட்டத்தை கையில் எடுக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

அய்யாகண்ணு
விவசாயிகளின் பயிர் கடனை தள்ளுபடி செய்தால்தான் இதுபோன்ற பிரச்சனைகள் வராது. சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதனை வங்கிகள் எடுத்துக் கொள்ளட்டும். ஆனால் விவசாயிகளை மிரட்டக் கூடாது என்றாவது தமிழக அரசு வங்கி அதிகாரிகளை வலியுறுத்த வேண்டும். இதனை செய்யாதவரை விவசாயிகள் தற்கொலை தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். என்று அய்யாகண்ணு கூறியுள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications