கட்டளை கால்வாயில் நீர் திறக்க கோரி தஞ்சை விவசாயிகள் சாலை மறியல்... போக்குவரத்து பாதிப்பு
தஞ்சையில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தஞ்சை: தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கட்டளை கால்வாயில் இருந்து பாசனத்துக்கு நீர் திறக்க கோரி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
தஞ்சை மாவட்டத்தில் செங்கிப்பட்டியில் உள்ள கட்டளை கால்வாயில் பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விட கோரி பொது பணித் துறையினரிடம் விவசாயிகள் கோரி வந்தனர்.

ஆனால் இது வரை திறந்துவிடப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து 1000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தஞ்சை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் குவிந்தனர். அப்போது அங்கு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் திருச்சி, சேலம், கோவை செல்லும் சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வழிநெடுகிலும் வாகனங்கள் வரிசைக் கட்டிக் கொண்டு நிற்கின்றன.
இதேபோல் கடந்த சில நாள்களுக்கு முன்பு பெரியாறு பிரதான கால்வாயிலிருந்து தண்ணீர் திறந்து விட கோரி மேலூர் விவசாயிகள் திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கூடாரம் அமைத்து மறியலில் ஈடுபட்டனர். சுமார் 5 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications