விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் ‘கேன்டி க்ராஸ்’ விளையாடிய பெண் அதிகாரி
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் பெண் அதிகாரி ஒருவர் வீடியோ கேம் விளையாடியது அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தகுந்த பதிலளிக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் விவேகானந்தன் தலைமையில் நேற்று நடந்தது. இதில் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் விவசாயிகளின் கேள்விகளுக்கு ஆட்சியர் விவேகானந்தன் பதில் அளித்துக் கொண்டிருந்த போது ஆட்சியர் அருகே அமர்ந்திருந்த அரூர் சர்க்கரை ஆலை நிர்வாக இயக்குனர் கவிதா செல்போனில் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தார்.
விவசாயிகள் பேசியதையும் கேட்கவில்லை. மாவட்ட ஆட்சியர் அளித்த பதிலையும் கவனிக்கவில்லை. கவிதா கீழே குனிந்தவாறு செல்போனில் ஆர்வத்துடன் விளையாடிக் கொண்டிருந்ததை கூட்டத்திற்கு வந்த சிலர் புகைப்படம் எடுத்தனர். சிலரோ வீடியோவிலும் பதிவு செய்தனர்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த கவிதா விளையாட்டை நிறுத்திவிட்டு கூட்டத்தை கவனிக்க ஆரம்பித்தார். 5 நிமிடங்களுக்கு மேல் அவர் செல்போனில் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் தற்போது 'வாட்ஸ்-அப்' மூலம் வேகமாக பரவி வருகிறது.
இதுகுறித்து தர்மபுரி மாவட்ட ஆட்சியர் விவேகானந்தனிடம் கேட்டபோது விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் அதிகாரி கவிதா வீடியோ கேம் விளையாடியது தொடர்பாக வந்த தகவலை அடுத்து அவருக்கு விளக்கம் கேட்டு இன்று நோட்டீசு அனுப்ப உள்ளோம். அவர் அளிக்கும் தகவலை பெற்று சர்க்கரை ஆலை ஆணையர் மற்றும் பொதுத்துறைக்கு அனுப்பி வைக்கப்படும். அவர்கள் தான் மேல் நடவடிக்கை எடுப்பார்கள் என்று கூறினார்.
விவசாயிகள் அதிர்ச்சி
தங்களின் குறைகளைத் தீர்ப்பார் என்றுதான் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தோம். கூட்டத்திற்கு வந்தும் தங்களின் பேச்சைக் கேட்காமல் செல்பேனில் விளையாடியது எந்த விதத்தில் நியாயம். இதற்கு தகுந்த பதிலளிக்க வேண்டும், அதிகாரி கவிதா மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications