சேலம் 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு.. விளை நிலத்தில் நட்டுவைக்கப்பட்ட கல்லை பிடுங்கி எறிந்து போராட்டம்!
சேலம் எட்டு வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து செங்கத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
Recommended Video

சேலம்: எட்டு வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து செங்கத்தில் விவசாயிகள் விளை நிலத்தில் நட்டுவைக்கப்பட்ட கல்லை பிடுங்கி எறிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் - சென்னை இடையிலான எட்டு வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் இன்று இரண்டாவது நாளாக நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நிலம் அளவீடு செய்ய எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் நிலத்தை அளந்து நட்டு வைத்திருந்த கல்லையும் அவர்கள் பிடுங்கி எறிந்தனர்.
நிலம் எடுப்பதாக முன்கூட்டியே ஏன் நோட்டீஸ் அனுப்பவில்லை என்றும் விவசாயிகள் கேள்வி எழுப்பினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதைதொடர்ந்து விவசாயிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். இதேபோல் விவசாயிகள் எதிர்ப்பு குறித்து செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களையும் போலீசார் தடுத்து நிறுத்தினர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications