சோபியாவின் ஒரே கோஷம்.. ஒரு மணி நேரத்தில் தேசிய அளவில் வைரல் ஆன #பாசிசபாஜக_ஆட்சிஒழிக!
மாணவி சோபியா கைது செய்யப்பட்டதை அடுத்து #பாசிசபாஜக_ஆட்சிஒழிக என்ற ஹேஷ்டேக் 1 மணி நேரத்தில் தேசிய அளவில் வைரல் ஆகி உள்ளது..
Recommended Video

சென்னை: மாணவி சோபியா கைது செய்யப்பட்டதை அடுத்து #பாசிசபாஜக_ஆட்சிஒழிக என்ற ஹேஷ்டேக் 1 மணி நேரத்தில் தேசிய அளவில் வைரல் ஆகி உள்ளது..
சோபியா பற்றித்தான் தற்போது தமிழகமே பேசிக்கொண்டு இருக்கிறது. ஒரு விமான பயணம், அவரை இந்தியா அளவிற்கு வைரலாக்கும் என்று அவரே நினைத்து இருக்க மாட்டார்.
.நேற்று தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசைக்கு எதிராக அவர் இட்ட ''பாசிச பாஜக ஆட்சி ஒழிக கோஷம்'' பெரிய வைரல் ஆகியுள்ளது. இதனால் தமிழிசைக்கும் சோபியாவிற்கும் இடையே கடும் வாக்குவாதம் மூண்டது.
|
தேசிய அளவில் வைரல்
இதன் காரணமாக பலரும் சோபியாவிற்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் குரல் கொடுக்க ஆரம்பித்தனர். தமிழிசைக்கு, பாஜகவிற்கு எதிராக கண்டனம் தெரிவிக்க தொடங்கினார்கள். இதனால் #பாசிசபாஜக_ஆட்சிஒழிக என்ற ஹேஷ்டேக் 1 மணி நேரத்தில் தேசிய அளவில் வைரல் ஆனது.

சோபியா என்று பெயர்
#பாசிசபாஜக_ஆட்சிஒழிக என்ற ஹேஷ்டேக் எந்த அளவிற்கு வைரல் ஆனதோ அதே அளவிற்கு சோபியா என்ற பெயரும் வைரல் ஆனது. ஆம், இந்தபெயரை வைத்து நேற்று மட்டும் 1 லட்சத்திற்கும் அதிகமான டிவிட்டுகள் செய்யப்பட்டுள்ளது.
|
ஆதரவு
இவர் ''இந்தியாவில் பேச்சு உரிமையே இல்லையா. சோபியாவை விடுதலை செய்ய வேண்டும்'' என்றுள்ளார்.
|
விட்டு இருக்கலாம்
இவர் ''வேலியில் போன ஓணானை வேட்டியில் எடுத்து விட்ட கதை...ஏர்போர்ட்ல முடிஞ்சி இருக்க வேண்டிய பிரச்சனய ஆல் இந்தியா டிரெண்ட் ஆகி போச்சே'' என்றுள்ளார்.












Click it and Unblock the Notifications