மனைவியை மறக்க முடியவில்லை.. 2 பிள்ளைகளை தூக்கில் மாட்டி கொலை.. தானும் தற்கொலை.. நாமக்கல்லில் சோகம்
மனைவி இழந்த சோகத்தில் 2 குழந்தைகளுடன் தந்தை தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
Recommended Video

நாமக்கல்: மனைவி இறந்த சோகம் தாங்க முடியாமல் 2 குழந்தைகளை கொன்று விட்டு தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாமக்கல் மாவட்டத்தையே பெரும் அதிர்ச்சிக்கும் சோகத்திற்கும் உள்ளாக்கி உள்ளது.
காவக்காரன்பட்டியை சேர்ந்தவர் ராஜகோபால். 37 வயதான இவர் ஒரு விவசாயி. திருமணமாகி 7 வயதில் வீரபத்திரன் என்ற மகனும், 4 வயதில் விஜயா என்ற ஒரு மகளும் உள்ளனர். ஆனால் 3 வருடத்திற்கு முன்பு மனைவி இறந்துவிட்டார். இதனால் 2-வது திருமணம் செய்து கொள்ளுமாறு ராஜகோபாலின் தந்தை வெள்ளையன் வற்புறுத்தியும் அதற்கு ராஜகோபால் மறுத்துவிட்டார்.

இந்நிலையில் நேற்றுமுன் தினம் இரவு ராஜகோபாலன் தனது குழந்தைகளுடன் வீட்டிற்குள்ளும், வெள்ளையன் வீட்டிற்கு வெளியேயும் படுத்திருந்தனர். காலையில் தூங்க எழுந்த வெள்ளையன் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, 3 பேரையும் காணவில்லை. பல இடங்களில் அவர்களை தேடி வந்தநிலையில், 3 பேரும் விவசாய கிணற்று பகுதியில் மரத்தினில் தூக்கில் தொங்குவதாக தகவல் கிடைத்தது.
வெள்ளையன் விரைந்து சென்றுபார்த்தபோது, 3 பேரும் வேப்பமரத்தில் சடலமாக தொங்கியபடி கிடந்தனர். அதிர்ச்சியடைந்து கதறி அழுத வெள்ளையன் இதுகுறித்து எருமப்பட்டி போலீசில் புகார் செய்தார். விரைந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், ராஜகோபால், தூங்கி கொண்டிருந்த தனது குழந்தைகளை தோட்டத்துக்கு அழைத்து சென்று, அவர்களை தூக்கு மாட்டி கொலை செய்துவிட்டு, பின்னர் தானும் தூக்கில் தொங்கி உயிரை விட்டது தெரியவந்தது. மனைவியின் மீது அதிக பிரியம் வைத்திருந்ததாலும், அவரை பிரிந்து வாழ முடியாது என்பதாலும் ராஜகோபாலன் இந்த முடிவை எடுத்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications