திமுகவுக்கு ஆதரவாக பிரசாரம்.. இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் தந்தை அறிவிப்பு
சென்னை: பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் தந்தையும், இந்திய அப்போஸ்தல திருச்சபைகளின் பேராயத்தின் தலைமைப் பேராயருமான எஸ்.எம். ஜெயக்குமார் திமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் கூட்டணிப் பேச்சுக்கள் கிட்டத்தட்ட அனைத்துக் கட்சிகளிலுமே தேக்க நிலையில் உள்ளன. இந்த நிலையில் பெரிய கட்சிகள் தங்களது ஆதரவுகளை உறுதி செய்ய ஆரம்பித்துள்ளன.
அதிமுக தனது ஆதரவு குட்டிக் கட்சிகளின் தலைவர்களை சந்தித்துப் பேசியுள்ளது. அதேபோல, திமுகவும் தனக்கு ஆதரவு தரும் குட்டிக் கட்சிகளின் ஆதரவை உறுதி செய்து வருகிறது.

குட்டிக் கட்சிகள், அமைப்புகள்
திமுக. தலைமையிலான கூட்டணிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று 19 கட்சிகள் மற்றும் அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன. நேற்று முன்தினம் 27 கட்சிகள் மற்றும் அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன.

நேற்று 18
இந்த நிலையில் நேற்று மேலும் 18 கட்சிகள் மற்றும் அமைப்புகளின் நிர்வாகிகள் அண்ணா அறிவாலயத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தங்களுடைய ஆதரவை தெரிவித்தனர்.

இவர்கள்தான்
அகில இந்திய அம்பேத்கர் மக்கள் கழகம், மக்கள் தேசம் கட்சி, அம்பேத்கர் மக்கள் கழகம், அம்பேத்கர் மக்கள் கட்சி, தெருவோர குடிசை வாழ்வோர் முன்னேற்ற சங்கம், அகில இந்திய மக்கள் விடுதலை முன்னணி, மக்கள் பாதுகாப்பு கூட்டணி, தமிழர் முன்னேற்ற கழகம், இந்திய மக்கள் கட்சி, புதிய தலைமுறை கட்சி, அனைத்து இந்து இயக்கங்களின் கூட்டமைப்பு, முத்தரையர் முற்போக்கு சங்கம், தமிழ்நாடு கிராமணிகுல முன்னேற்ற நலச்சங்கம், அகில இந்திய நாடார் இளைஞர் பேரவை, இந்திய தேசிய கிறிஸ்துவ கட்சி, வன்னியர் சங்கம், உழைப்பாளர் கட்சி, தென்னிந்திய வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் நலச்சங்கம்.

ஹாரிஸ் ஜெயராஜ் அப்பா
மேலும் பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் தந்தையும், இந்திய அப்போஸ்தல திருச்சபைகளின் பேராயத்தின் தலைமை பேராயருமான எஸ்.எம்.ஜெயகுமார் உள்பட நிர்வாகிகளும் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். திமுக கூட்டணிக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டு, 234 தொகுதிகளிலும் வெற்றிக்காக முழுவீச்சில் பாடுபடுவோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.
-
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ!












Click it and Unblock the Notifications