ஆசைக்கு இணங்காத மருமகள்.. வாயில் விஷத்தை ஊற்றிய மாமனார்.. சிதம்பரத்தில் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

சிதம்பரம்: கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் ஆசைக்கு இணங்காத மருமகளின் வாயில் விஷத்தை ஊற்றிக் கொல்லப் பார்த்துள்ளார் மாமனார் ஒருவர். இதுதொடர்பாக போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த அடாவடி செயலை தட்டிக் கேட்காத அப்பெண்ணின் கணவரும் தற்போது தலைமறைவாகி விட்டார். மாமனாரும் ஆளைக் காணோம். இருவரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

Father in law absconded after teasing his daughter in law

சிதம்பர்த்தைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவர் தனது மகள் ஜனனியை குடிமூளையில் கட்டிக் கொடுத்துள்ளார். திருமணமாகி போனது முதல் பல கொடுமைகளைச் சந்தித்துள்ளார் ஜனனி. இந்த நிலையில் ஜனனி கடலூர் எஸ்.பி. விஜயகுமாரிடனம் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.

அதில், எனது மாமனார் என்னிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டு வந்தார். இதை எனது கணவரிடம் கூறியபோது அவர் தட்டிக் கேட்கவில்லை, கண்டு கொள்ளவில்லை. இதனால் எனது மாமனாருக்கு மேலும் தைரியம் வந்தது. என்னிடம் தொடர்ந்து சீண்டி வந்தார். நான் மறுக்கவே கோபமடைந்து அவரும் எனது கணவரும் சேர்ந்து எனது வாயில் விஷத்தை ஊற்றிவிட்டனர்.

இதுகுறித்துத் தெரிய வந்ததும் எனது தம்பிகள் பசுபதி, அமர்நாத் ஆகியோர் வந்து தட்டிக் கேட்டனர். ஆனால் எனது கணவரும், மாமனாரும் அவர்களை அடித்து விரட்டி விட்டனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாகி விட்ட கணவரையும், மாமனாரையும் தேடி வருகின்றனர். ஜனனிக்கு 3 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+