அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம்.. தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம்... இன்று தந்தையர் தினம்

அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம், தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று தந்தையர் தினம் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.

குழந்தைகளுக்கு எப்போதும் ஹீரோவாக இருப்பவர் தந்தை எனலாம். அத்தகைய தந்தையை போற்றும் வகையில் இன்று நாடு முழுவதும் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதுகுறித்து டுவிட்டரில் கருத்துகள் பரிமாறப்பட்டுள்ளது. அவற்றில் சிலவற்றை காண்போம்.

அடங்கி போவேன்

நீ அடம் பிடித்தாலும் அடங்கி போகின்றேன்
உன் மடி மெத்தை மேல் மடங்கி கொள்கின்றேன்

மறுமணம் செய்யாமல்

மனைவி இறந்த பின்னும்,
மறுமணம் செய்துக்கொள்ளாமல்
தன் பிள்ளைகளின்
நலனிற்காக வாழும் அனைத்து
தந்தைகளும்,
தாயுமானவர்களே.. !

அறிவை வாங்கலாம்

அன்னையிடம் நீ அன்பை வாகலாம். தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம்.

நண்பர் என்பதா...

வேலை கிடைக்காமல் அலைந்த நாட்களில் உனக்கு பிடித்த வேலை கிடைக்கும் வரை முயற்சி செய்துகொண்டே இரு என்று ஊக்கமளித்து என் முயற்சிகளுக்கு உந்து கோலாய் இருந்த என் தந்தையை கடவுள் என்பதா??, நண்பன் என்பதா??,
இல்லை ஆசான் என்பதா??

அப்பாவிடம் மட்டும்...

கோபத்திலும் ஒளிந்திருக்கும்
அளவில்லா அன்பு ,
அப்பாவிடம் மட்டும் !

லட்சியங்களையும்

ஆசையையும் இலட்சியங்களையும் தன் மகனுக்காக விட்டுகொடுத்து தன் மகனின் நல்வழியை மட்டுமே எண்ணி பூமியில் வாழும் தெய்வம் தந்தை.
தந்தை சொல் மிக்க மந்திரம் என்றுமே இல்லை..!!
#தந்தையர்தினம் வாழ்த்துக்கள்.

சொந்த காலில் நிற்கும் போது...

கஷ்டத்திலும், கேட்டதையெல்லாம் வாங்கி கொடுத்து பணத்தின் அருமை தெரியாமல் வளர்த்து ஆளாக்கிவிட்டீர்கள்... சொந்த காலில் நிற்கும் போதுதான் அதன் வலி உணர்கிறேன்...

ஸ்கூல் புக்கில் ஒளித்து...

மகன்களைப் பெற்ற அப்பாக்களுக்குத்தான் தெரியும் ஸ்கூல் புக்கில் ஒளித்து வைத்தால்தான் காசு காணாமல் போகாதென்று..

தந்தையர் தின நல்வாழ்த்துக்கள் !

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+