பெற்ற மகளை ஒரு வருடமாக பலாத்காரம் செய்த தந்தைக்கு 10 வருடம் சிறை
சென்னை: சென்னை அருகே கடந்த ஒரு வருடமாக பெற்ற மகளை பாலியல் ரீதியாக தவறாகப் பயன்படுத்தி வந்த தந்தையை போலீஸார் கைது செய்தனர். அவருக்கு தற்போது நீதிமன்றம் 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
சென்னை, அனகாபுத்தூர் அயோத்தி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சோழராஜன். 43 வயதாகும் இவர் தனியார் நிறுவனத்தில் வாட்ச்மேன் ஆக இருந்து வந்தார். இவரது மனைவி பெயர் வசந்தா. வசந்தா 7 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
இத்தம்பதிகளுக்கு 15 மற்றும் 13 வயதில் இரு மகள்கள் உள்ளனர். இருவரும் அரசுப் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்த நிலையில் தனது வேலை முடிந்து வீடு திரும்பும்போது குளிர்பானம் வாங்கி வருவது வழக்கம். வீட்டுக்கு வந்ததும். அதில் மயக்க மருந்தைக் கலந்து பெரிய மகளுக்குக் கொடுத்து அவர் மயங்கியதும், பெற்ற மகள் என்று கூடப் பாராமல் அவரை பாலியல் ரீதியாக தவறாகப் பயன்படுத்தியுள்ளார்.
கடந்த ஒரு வருடமாக இந்த அக்கிரமத்தைச் செய்து வந்துள்ளார். கடந்த ஆண்டு அக்டோபர் 22ம் தேதி இதேபோல தனது 2வது மகளிடமும் நடக்க முயன்றபோது அவர் தடுத்துத் தப்பி விட்டு பள்ளிக்குப் போய் விட்டார். அங்கு தனது ஆசிரியையிடம் நடந்ததைக் கூறி அழுதுள்ளார். இதையடுத்து சிறார் பாதுகாப்பு சைல்டன் லைன் எண்ணுக்கு ஆசிரியை தகவல் கொடுத்தார்.
இதைத் தொடர்ந்து சோழராஜன் மீது தாம்பரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் தரப்பட்டது. புகாரின் பேரின் சோழராஜன் கைது செய்யப்பட்டார். விசாரணைக்குப் பின்னர் செங்கல்பட்டு மகளிர் கோர்ட் நீதிபதி ஆனந்தி, சோழராஜனுக்கு, முதல் மகளை பலாத்காரம் செய்ததற்கு, 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், 2வது மகள் மீது பாலியல் தாக்குதல் நடத்தியதற்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் விதித்துத் தீர்ப்பளித்தார். இரு தண்டனைகளையும் ஏக காலத்தில் அவர் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
-
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications