பெண் கேட்க வரச் சொல்லி நயவஞ்சகமாக காதலன் வெட்டிக் கொலை... காதலியின் தந்தை போலீசில் சரண்!
திருநெல்வேலி: பெண் கேட்க வரச் சொல்லி நயவஞ்சகமாக காதலனை காதலியின் தந்தை வெட்டிக் கொலை செய்துவிட்டு போலீசில் சரண் அடைந்ததால் நெல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவகுருநாதன். எம்எஸ்சி படித்து வி்ட்டு மருந்து விற்பனை பிரிதிநிதியாக வேலை பார்த்து வந்தார். இவர் தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்று சொல்லப்படுகிறது. நெல்லை மாவட்டம் தேவர்குளம் அடுத்த இலந்தைகுளத்தை சேர்ந்தவர் கஸ்தூரி.

நர்சிங் படிப்பு படித்த இவருக்கு அரசு வேலை கிடைத்தது. பழநியை அடுத்த நெய்கராபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கஸ்தூரி நர்சாக பணியாற்றி வந்தார். அப்போது கஸ்தூரிக்கும் சிவகுருநாதனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர்.
இந்த காதல் விவகாரம் இருவரின் பெற்றோருக்கும் தெரிய வரவே கஸ்தூரியின் பெற்றோர் நெல்லை மாவட்டம் செங்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பணி இடமாற்றம் செய்து விட்டனர். சிவகுருநாதன் தலித் என்பதால் எதிர்ப்பு கடுமையாகவே இருந்துள்ளது. செங்கோட்டை வந்ததால் அவ்வப்போது செங்கோட்டைக்கு வந்து கஸ்தூரியை சந்தித்து பேசிவிட்டு சென்றுள்ளார் சிவகுருநாதன்.
செங்கோட்டைக்கு வந்த பிறகும் காதல் தொடர்ந்ததால் கஸ்தூரியை வேலைக்கு செல்ல வேண்டாம் என்று அவரது பெற்றோர் கடந்த சில நாட்களாக வீட்டில் அடைத்து வைத்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், திடீரென கஸ்தூரியின் தந்தை, கஸ்தூரியிடம் காதலுக்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார். மேலும், சிவகுருவை பெண் கேட்டு வீட்டிற்கு வர சொல்லும்படி கஸ்தூரியிடம் சொல்லியிருக்கிறார். இதனை நம்பிய கஸ்தூரி சிவகுருநாதனிடம் பெண் கேட்டு வருமாறு செல்போனில் தெரிவித்துள்ளார்.
இந்த நயவஞ்சகத் தனம் தெரியாத சிவகுருநாதன், திண்டுக்கல்லில் இருந்து மாலை மேலஇலந்தைகுளம் வந்தார். அங்குள்ள கஸ்தூரியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் இருந்த கஸ்தூரியின் தந்தையிடம் பெண் கேட்டிருக்கிறார். அதற்கு கஸ்தூரியின் தந்தை தன் மகளை மறந்துவிட வேண்டும் என்று மிரட்டியுள்ளார். இதனை ஏற்க மறுத்த சிவகுருநாதனை கையில் மறைத்து வைத்திருந்த அரிவாளில் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தார் கஸ்தூரியின் தந்தை. படுகாயம் அடைந்த சிவகுருநாதன் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து, கஸ்தூரியின் தந்தை போலீசில் சரண் அடைந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications