ஜல்லிக்கட்டு.. மெரீனாவைக் கலக்கிய இளைஞர் படை.. அசந்து போன அன்புமணி! #WeNeedJallikattu
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரீனாவில் திரண்ட இளைஞர் படை பெருமை தருவதாக பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை: ஜல்லிக்கட்டு எங்களது கலாச்சாரம், பாரம்பரியம். அதைக் காக்க நாங்கள் இருக்கிறோம் என்று இன்று மெரீனாவில் கூடி அதிர வைத்த இளைஞர் படையைப் பார்த்து சென்னையே வியந்து நிற்கிறது. பாமக இளைஞர் அணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸும் இந்த இளைஞர்களின் முயற்சியைப் பார்த்து பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை மெரீனா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இன்று பெரும் இளைஞர் படை சமூக வளைதளங்கள் மூலமாக ஒருங்கிணைந்து ஒன்று கூடி பேரணி நடத்திய பிரமிக்க வைத்து விட்டது.
மெரீனா பீச்சுக்கு வந்த அத்தனை பேரும் இந்தப் பேரணியை பார்த்து ஆச்சரியப்பட்டனர். பலர் அதில் கலந்து கொண்டு உற்சாகமூட்டினர். பாரம்பரிய உடையான வேட்டியுடன் பல இளைஞர்கள் நடை போட்டு கலக்கினர்.
|
அன்புமணி பெருமை பாராட்டு
இந்தப் பேரணி குறித்து பாமக இளைஞர் அணித் தலைவர் டாக்டர் அன்புமணி பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் போட்டுள்ள டிவீட்டில், இளைஞர் படையைப் பார்த்து பெருமைப்படுகிறேன். தமிழர்களின் அடையாளமான ஜல்லிக்கட்டு காப்பாற்றப்படும் என்ற உணர்வு வருகிறது என்று மகிழ்ச்சியும், வாழ்த்தும் தெரிவித்துள்ளார் அன்புமணி.
|
ஏறு தழுவுதல் எங்கள் உரி்மை
பேரணியில் பங்கேற்ற அருண் குமார் என்பவர் போட்டுள்ள டிவீட்டில், மெரீனா கடற்கரையில் இளைஞர்கள் பட்டாளம் படையெடுப்பு, #ஜல்லிக்கட்டு வேண்டி மாபெரும் ஆர்ப்பாட்டம், ஏறு தழுவுதல் எங்கள் உரிமை என்று குறிப்பிட்டுள்ளார்.
|
நேகாத வெல்லலாம்
விக்னேஷ் நல்லசாமி என்பவர் போட்ட பதிவு இது - நூறாக படை நூறாக தொட்ட இடமெல்லாம் தூளாக. நேராக வழி நேராக வெல்லலாம் தாறுமாறாக.
|
நாங்க நடத்துவோம்
விக்னேஷ் ராஜாராம் போட்ட டிவீட் இது. நாங்கள் நடத்துவோம். எங்களுக்குத் தேவை ஜல்லிக்கட்டு.
|
மெரீனாவுக்கு வந்து பாரு
கேலி செய்யும் பீட்டாவுக்கு மெரீனாவில் வைத்து பதிலடி இது என்று எந்திரப் புலவன் என்பவர் பெருமிதத்தோடு பதிலடி கொடுத்துள்ளார்.
|
அசர வைத்த மெரீனா
ஜாபர் என்பவர் மெரீனாவில் கூடிய இளைஞர் கூட்டத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டு போட்ட டிவீட் இது.
|
முடிஞ்சா தடுத்துப் பாரு
விக்கி என்பவர் போட்டுள்ள ட்வீட் இது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications