கல்வி கட்டண புகார்: பெரம்பூர் தொன் போஸ்கோ பள்ளி மீது விசாரணை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை பெரம்பூர் தொன் போஸ்கோ பள்ளி மீது கல்வி கட்டணம் குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது.

சென்னை பெரம்பூர் தொன் போஸ்கோ பள்ளியில் சுமார் 5000க்கும் மேற்பட்ட ஏழை மாணவர்கள் மற்றும் தடுத்தர மாணவர்கள் 6ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை படிக்கிறார்கள்.

இந்த பள்ளியில் அரசு வழங்கும் 14 வகையான இலவச திட்டங்களும் மாணவர்களுக்கு சரிவர வழங்கப்படுவது இல்லை. இது முழுக்க அரசு உதவி பெறும் பள்ளி ஆகும். இந்த பள்ளியில் ஒவ்வொரு வகுப்பிற்குமான கட்டண விவரத்தை தகவல் பலகையில் பகிரங்கமாகவே ஒட்டியுள்ளனர். இந்த பணத்தை வகுப்பாசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்களை கொண்டு வசூலிக்கின்றனர். வசூலிக்கப்படும் கட்டணத்திற்கு முறையான ரசீது கொடுப்பதில்லை.

கடந்த ஆண்டும் இதே போல் செய்துள்ளர்கள் என்று பெற்றோர்கள் தெரிவித்துள்ளார்கள். இதனால் மாணவர்கள் சிலர் பள்ளிப் படிப்பை தொடர முடியாத நிலைய ஏற்பட்டது என்று கூறப்படுகிறது.

விதிமுறையை மீறி பகிரங்கமாக கட்டணம் வசூல் செய்யும் பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் புகார் கொடுக்க தயக்கம் காட்டி வருகின்றனர். காரணம், தங்களின் குழந்தைகளின் கல்வியை அது பாதிக்கும் என்ற அச்சத்தில் பெற்றோர்கள் புகார் கொடுக்க தயங்கி வருவதாக கூறப்படுகின்றது.

முதல்வரின் தனிப்பிரிவு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் பள்ளி கட்டண நிர்ணயக்குழு தலைவர் சிங்காரவேலு கமிட்டி ஆகியோருக்கு அகில இந்திய நுகர்வோர் - மனித உரிமைக்கு எதிரான லஞ்சம் ஊழல் மற்றும் குற்றத்திற்கு எதிரான அமைப்பு புகார் அனுப்பியுள்ளது.

அந்த அமைப்பின் சார்பாக பொதுச் செயலாளர் வெ.நரசிம்மன் பள்ளி கட்டண நிர்ணயக்குழு தலைவர் சிங்காரவேலு கமிட்டியில் புகார் கொடுத்தார்.

இப்புகாரின் பேரில் வரும் 27ம் தேதி அன்று கமிட்டி முன் பெரம்பூர் தொன் போஸ்கோ பள்ளியின் தலைமையாசிரியரை விசாரணைக்கு ஆஜராகுமாறு தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் படத்திற்கு அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்யப்படுவதாக சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்திய அமைப்பு தான் இந்த அகில இந்திய நுகர்வோர்-மனிதஉரிமைக்கு எதிரான லஞ்சம் ஊழல் மற்றும் குற்றத்திற்கு எதிரான அமைப்பு ஆகும்.

தற்போது, பெற்றோர்களை பாதிக்கும் கல்வி கட்டணம் குறித்த விவகாரத்தில் இந்த அமைப்பு களத்தில் இறங்கியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+